தேங்காய் பூண்டு பொடி | Thengai Poondu Podi
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தேங்காய் பூண்டு பொடி செய்வது எப்படி என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வீட்டில் நாம் அதிகமாக செய்யும் டிபன் இட்லி, தோசையாகத் தான் இருக்கும். இதற்கு எப்போதும் போல் தேங்காய் சட்னி, கார சட்னி தான் வைத்து சாப்பிடுவோம். இதனை தவிர்த்து இட்லி பொடி வைத்து சாப்பிடுவோம். ஒரு சிலருக்கு இந்த இட்லி பொடியும் சலித்து விடும்.
ஆகையால், இந்த இட்லியை எப்போதும் செய்வதுபோல் செய்யாமல், தேங்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய் சேர்த்தால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்துக்கொள்ள முடியாது என்று சிலர் நினைப்பீர்கள். ஆனால், இந்த முறையில் செய்தால் மாதக்கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஓகே வாருங்கள் தேங்காய் பூண்டு பொடி எப்படி மாதக்கணக்கில் கெடாமல் செய்வது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
Thengai Poondu Podi Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் – 1 கப்
- பூண்டு – 7 பற்கள்
- உளுந்தம்பருப்பு – 1/4 கப்
- பட்டமிளகாய் – 10
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
அய்யர் வீட்டு பருப்பு பொடி செய்முறை விளக்கம்..!
செய்முறை விளக்கம்:
- முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் துருவி வைத்த தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
- தேங்காய் நன்றாக சிவந்து வாசனை வரும்வரை வதக்கி ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்து, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 1/4 கப் உளுந்தம்பருப்பினை சேர்த்து, பருப்பு பொன்னிறமாக மாறும்வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- அத்தன் பிறகு, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 10 வரமிளகாயை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, பூண்டு பற்களை லேசாக மசித்து, அதனையும் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து, அதில் வறுத்த வைத்த பூண்டு, உளுந்தம்பருப்பு மற்றும்
பட்டமிளகாய் ஆகிய மூன்றினையும் லேசாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். - இறுதியாக, இதனுடன் பொன்னிறமாக வதக்கி வைத்த தேங்காய் துருவலை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இவை நன்றாக ஆறியதும், இதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, உங்களுக்கு தேவையான போது எடுத்து பயன்படுத்தலாம். மாதக்கணக்கில் இதனை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |