முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

Advertisement

Thirupagam Recipe in Tamil | திருப்பாகம் செய்வது எப்படி.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருபாகம் செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்த திருப்பாகம் ஸ்வீட் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல், திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான ஸ்வீட். திருநெல்வேலியில் அல்வாவிற்கு அடுத்தபடியாக பிரபலமான ஸ்வீட் என்றால் அது திருப்பாகம் தான்.

முருகருக்கும் மிகவும் பிடித்த உணவு பொருள் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் பிரசாதமாக திருப்பாகம் வழங்கபடுகிறது. மேலும், முருகருக்கு நெய்வேத்தியமாக திருப்பாகம் படையல் வைத்து வழிபாடு செய்வார்கள். திருப்பாகம் நெய்வேத்தியமாக படைத்தால் முருகர் மனம் மகிழ்வார். திருபாகத்தினை கடலை மாவு அல்வா என்றும் கூறுவார்கள். கடலை மாவினை கொண்டு மிகவும், எளிதாக செய்யக்கூடிய ஸ்வீட். இதனை எப்படி சுவையாக செய்வது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.  திருப்பாகம் செய்முறை விளக்கத்தினை படித்து தெரிந்துக்கொண்டு முருகருக்கு நெய்வேத்தியமாக படைத்து  வழிபடுங்கள்.

திருப்பாகம் | Thirupagam Sweet for Murugan in Tamil:

Thirupagam Sweet for Murugan in Tamil

Thirupagam Recipe Ingredients in Tamil:

  • கடலை மாவு – 1 கப்
  • முந்திரி பருப்பு பவுடர் – 1 கப் 
  • பால் – 2 கப் 
  • சர்க்கரை – 1 1/2 கப் 
  • நெய் – 1 கப் 
  • குங்குமப் பூ அல்லது ஏலக்காய் தூள் – 1 பின்ச்

How to Make Thirupagam in Tamil:

திருப்பாகம் செய்வது எப்படி

  • முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயராக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • இப்போது, அடுப்பில் ஒரு  அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரை 4 முதல் 5 நிமிடம் வரை கிளறி (வறுத்து) விடுங்கள்.
  • பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு, இறக்கி 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வரை ஆறவைத்து கொள்ளுங்கள்.
  • கடலை மாவு ஆறியதும், அதில் 1 கப் பாலினை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள்.
  • கட்டி இல்லாமல் கிளறியதும், மற்றொரு கப் பாலினை சேர்த்து கலந்து விட வேண்டும்.
  • இப்போது இதனை மீண்டும் அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து கட்டி பிடிக்க விடாமல் நன்றாக கிளறி விடுங்கள்.
  • கெட்டியாகும் வரை கிளறி விட்டு, சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும். சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் வரை நன்றாக கிளறி விட வேண்டும்.
  • பேஸ்ட் பதத்திற்கு வந்ததும், அதில் முந்திரி பருப்பு பவுடரை சேர்த்து கலந்து விட வேண்டும். அடுத்து, நெய்யினை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும்.
  • ஒவ்வொரு ஸ்பூனாக நெய் சேர்த்து 5 நிமிடம் வரை நன்றாக கலந்து விட வேண்டும்.
  • மாவு மென்மையாக வைத்ததும், இலகும் பதத்திற்கு வைத்ததும், அதில் சிறிதளவு ஏலக்காய் தூள் அல்லது குங்குமம் பூ சேர்த்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமான திருப்பாகம் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement