மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்வது எப்படி? எப்பவும் செய்யுற தோசை இல்லாமல் இப்படி விதியசமா செஞ்சு பாருங்க..!

Advertisement

Tomato Dosai Recipe For Dinner In Tamil

உங்கள் குழந்தைகள் தோசை தான் உணவாக வேண்டும் என்று அடம்பிடிக்குறார்களா? அப்போ தினமும் செய்யுற தோசை போல் இல்லாமல் இன்றைக்கு மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்து பாருங்கள். தினமும் நம் வீட்டில் என்ன உணவு செய்யுறது என்பதே வீட்டின் தாய்மார்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். அப்படி எதாவது ஆரோக்கியமாக செய்யலாம் என்று செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும் அதேசமயத்தில் அந்த உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அம்மாக்களுக்காகவே இன்றைக்கு தக்காளி தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி ஒரு முறை செய்து பாருங்க..

தக்காளி தோசை செய்ய தேவையான பொருட்கள்:

  • தோசை மாவு – புளித்த மாவு
  • தக்காளி – ஒன்று அல்லது இரண்டு
  • சிவப்பு மிளகாய் – ஒன்று அல்லது மூன்று
  • பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று
  • ரவா – 1 ஸ்பூன்
  • கடலை மாவு – 1 ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 ஸ்பூன்

தக்காளி தோசை செய்முறை:

  • Step 1 – ஒரு மிக்ஸிஜரில் தக்காளி, மிளகாய் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • Step 2 – தோசை மாவுடன் அரைத்த தக்காளியை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • Step 3 – தோசை மாவு கெட்டியாவதற்காக கலந்த மாவுடன் ரவா 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் மற்றும் அரிசி மாவு 1 ஸ்பூன்.
  • Step 4 -தோசை மாவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
  • Step 5- அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு ஒரு 5 முதல் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • Step 6 – மாவு ஊறிய பிறகு தோசை ஊற்றினால், மொறுமொறுப்பான தக்காளி தோசை ரெடி.
  • தக்காளி தோசைக்கு தொட்டுக்கையாக தேங்காய் சட்னி அல்லது வேர்க்கடலை சட்னி அரைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement