இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!

ulundu vadai

உளுந்து வடை செய்முறை (Ulundu Vadai) விளக்கம் ..!

வணக்கம் தோழிகளே இன்று நம் பொதுநலம் பகுதியில் மொறு மொறு உளுந்து வடை (Ulundu Vadai) செய்யலாம் வாங்க..! பொதுவா நாம் வீட்டில் வடை சுடும் போது, என்னதான் உளுந்து மாவை பக்குவமாக அரைத்தாலும் உளுந்து வடை மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்காது. இந்த ட்ரிக்கை செய்து பாருங்கள், உளுந்து வடை (Ulundu Vadai) மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்கும்.

சரி இப்போது மொறு மொறு உளுந்து வடை எப்படி செய்ய வேண்டும் என்ற இரகசியத்தை சொல்றேன் வாங்க..!

பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..?

உளுந்து வடை (Ulundu Vadai) செய்ய தேவையான பொருட்கள்:

 1. உளுந்து – 1 1/2 டம்ளர்
 2. வேகவைத்த உருளை கிழங்கு – இரண்டு
 3. கேரட் பொடிதாக நறுக்கியது – ஒரு கையளவு
 4. கருவேப்பிலை – சிறிதளவு
 5. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
 6. வெங்காயத்தை – ஒரு கப் (பொடிதாக நறுக்கியது)
 7. மிளகு தூள் சிறிதளவு அல்லது பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது – 2
 8. தேவையான அளவு – உப்பு
 9. எண்ணெய் – 1/2 லிட்டர்
 10. பச்சரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
 11. இஞ்சி பொடிதாக நறுக்கியது – சிறிதளவு

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

உளுந்து வடை செய்முறை (Ulundu Vadai) விளக்கம்:

உளுந்தை 3 மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து, பின்பு கிரேண்டரில் அல்லது மிக்சியில் சேர்த்து தண்ணீர் அதிகம் ஊற்றாமல் உளுந்தை கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

பின்பு வேகவைத்துள்ள உருளை கிழங்கை நன்றாக மசித்து, உளுந்து மாவுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு கப் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பிசையவும்.

பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கேரட், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

பிறகு மிளகு தூளை தங்களது காரத்திற்கேற்ப சேர்க்கவும். பின்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான் வடை மாவு தயார்.

இப்போது அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அம்புட்டுதான் சுவையான மொறு மொறுன்னு, சாஃப்டான வடை தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டலாம் வடை மிகவும் சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்பு:

உளுந்து மாவில் அதிகமாக தண்ணீர் இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

அதேபோல் வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கவும் சிறிதளவு பச்சரிசி மாவை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil