உளுந்து புட்டு செய்வது எப்படி..? | Ulunthu Puttu Seivathu Eppadi in Tamil
முற்காலத்தில் நம் முன்னோர்கள் புட்டு வகைகளையே அதிகமாக விரும்பி சாப்பிட்டு வந்தனர். அக்காலத்தில் விளையும் பல்வேறு வகையான பயிறுகளில் புட்டு செய்து சாப்பிட்டு வந்தார்கள். அந்த வகையில் உடலுக்கு வலிமை தரும் உளுந்து புட்டு எப்படி செய்வது.? என்று இப்பதிவில் பார்க்கலாம். இந்த உளுந்து புட்டு சாப்பிடுவதால் உடல் வலிமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளை போக்கக்கூடிய மருந்தாகவும் இருக்கிறது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
உளுந்து புட்டு செய்வது எப்படி..?
உளுந்து புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- உளுந்து- 200 கிராம்
- புழுங்கல் அரிசி-100 கிராம்
- உப்பு- சிறிதளவு
- தேங்காய்- தேவையான அளவு
- ஏலக்காய்- 4 (பொடி செய்தது)
- நாட்டுச்சர்க்கரை- 6 ஸ்பூன்
- நெய்- 1/2 ஸ்பூன்
உளுந்து புட்டு செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு கடாயில் உளுந்து சேர்த்து வறுத்து கொள்ளவும். (கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து). அடுப்பை குறைவாக வைத்து, உளுந்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு, கடாயில் அரிசி சேர்த்து அதையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து வைத்த அரிசியையும், உளுந்தையும் சிறிது நேரம் உலர்த்தி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். அதனை மிகவும் நைசாக அரைக்காமல், சரியான பதத்தில் அரைத்துக் தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
இதையும் செய்து பாருங்கள்⇒ மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்முறை..!
ஸ்டேப்: 4
அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதற்கு பிறகு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசறி விடுங்கள். அதிகமான தண்ணீர் சேர்க்காமல் சரியான அளவில் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பொலபொலவென்று இருக்கும் பதத்தில் மாவை கலந்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அந்த மாவை ரவை சலிக்கும் சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
சலித்த மாவுடன் 1/2 கைப்பிடி துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
அதன் பிறகு, இட்லி தட்டில் சுத்தமான வெள்ளைத் துணியை வைத்து, அதில் நாம் செய்து வைத்த புட்டு மாவை சேர்த்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடிவிடுங்கள்.
புடலங்காய் புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்…! |
ஸ்டேப்: 7
இதை ஒரு 15 நிமிடம் வேகவிட்டு இறக்கி கொள்ளுங்கள். பிறகு, இந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் பொடி செய்த ஏலக்காய் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 8
பிறகு அதனுடன் சிறிதளவு நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தாங்க உடலுக்கு வலிமை தரும் ஆரோக்கியமான உளுந்து புட்டு ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |