இதுபோல் உப்பு கார ரொட்டி வித் நாட்டு சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா..?

Advertisement

Uppu Kara Roti in Tamil

எப்போதும் தோசை இட்லி செய்து சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அப்புறம் என்னதான் சாப்பிட வேண்டும் என்று கேட்பீர்கள். கொஞ்சம் வித்தியாசமான உப்பு ரொட்டி செய்து சாப்பிட போகிறோம். அது எப்படி வீட்டில் உப்பு கொஞ்சம் கூட போனால் கூட ஒரு வாய் கூட சாப்பிட முடியாது. ஆனால் உப்பு ரொட்டியை மட்டும் எப்படி சாப்பிடுவீர்கள்.

உப்பு ரொட்டி என்றால் அதில் உப்பு மட்டும் தான் இருக்குமா என்று கேட்பீர்கள். அதையும் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Uppu Kara Roti in Tamil:

ஸ்டேப்: 1

கோதுமை மாவு – 250  கிராம் இந்த மாவிற்கு தேவையான உப்பு இப்போது இரண்டையும் கலந்து கொள்ளவும்.

1 கைப்பிடி அளவு கொத்தமல்லி, அதனையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதனை சப்பாத்தி மாவு போல் பிசைவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்துவிட்டு ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.

ஸ்டேப்: 2

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் கடுகு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, கடுகு பொரிந்தவுடன் 1/2 ஸ்பூன் சீரகம், மிளகாய் 15 சேர்த்து ஒருமுறை வதங்கட்டும். அடுத்து அதில் 100 கிராம் அளவு பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து தனியா 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கருகவிடாமல் வதக்க வேண்டும். அடுத்து அதில் 50 கிராம் அளவிற்கு மாங்காய் சேர்க்கவும். பின் அதில் 1 டீஸ்பூன் சீனி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்

ஸ்டேப்: 3

இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் பேஸ்ட்போல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் மீது சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து வைக்கவும்.

அடுத்து அடுப்பை பற்றவைத்து கடாயில் 1 டீஸ்பூன் கடலை எண்ணெய், எண்ணெய் சூடானதும் அதில் 1/2 ஸ்பூன் கடுகு, கடுகு பொரிந்தவுடன் அதில் 1/2 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கலந்துவிட்டு, அதில் நாம் அரைத்துவைத்துள்ள சட்னியை சேர்த்து கலந்துவிடவும்.

ஸ்டேப்: 4

அடுத்து அந்த சட்னியில் மேல் பக்கம் அப்படியே நெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி அப்படியே வைக்கவும்.

ஸ்டேப்: 5

அடுத்து நாம் முதலில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவு இருந்தால் அதில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக்கொள்ளவும். பின்பு ஒவ்வொன்றாக சப்பாத்தி போல் செய்து கொள்ளவும்.

 uppu kara roti in tamil

அடுத்து தேய்த்த சப்பாத்தியின் மேல் பக்கம் நெய் தடவிக் கொள்ளவும். அடுத்து அதில் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் தடவிக் கொள்ளவும். பின் கொத்தமல்லி இலையை அதில் போட்டு அனைத்து பக்கமும் தடவிக் கொள்ளவும்.

அடுத்து சப்பாத்தியை சமோசா போல் மடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் நாம் மடித்துவைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு எடுத்து கொள்ளளவும். அவ்வளவு தான் நண்பர்களே உப்பு ரொட்டி தயார்..!

இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement