உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை..! ஒருமுறை இதை செய்து கொடுங்கள் அதன் பின் இதை மட்டும் தான் செய்வீர்கள்

urulaikilangu pepper fry in tamil

உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் உருளைக்கிழங்கை வறுவல், கிரேவி, பொரியல், குருமா மட்டுமே செய்து சாப்பிட்டிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று உருளைகிழங்கை வைத்து புதுமையான சாம்பார், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடிஸ் எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். பொதுவாக உருளை கிழங்கு என்றால் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சைடிஸ். ஆனால் ஒரே மாதிரியான உருளைக்கிழங்கை செய்துகொடுத்தால் பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போய்விடும். அதனால் இன்று இதை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
  பெரிய வெங்காயம் – 1
  பச்சை மிளகாய் – 1
  தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  கடுகு – அரை டீஸ்பூன்
  மிளகு தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
கறிமசாலா – அரை ஸ்பூன்
  இஞ்சி பூண்டு விழுந்து – 1ஸ்பூன்
தயிர் -2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ Potato Fry Recipe in Tamil

உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் கால் கிலோ பேபி உருளைக்கிழங்கை தனியாக உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பேபி உருளைக்கிழங்கு இல்லையேற்றால் பெரிய உருளைகிழங்கை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப் – 2

அடுப்பை பற்றவைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு பொரித்த பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப் – 3

வெங்காயம் லேசாக வறுபட்டவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயயை சேர்த்து வதக்கவும். பின்பு அது நன்றாக வதங்கியதும். மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப் – 4

பின்னர் 2 ஸ்பூன் தயிர் ஊற்றி மிருதுவாக பிரட்டி விடவும். எண்ணெய் தயிர் ஊற்றி நன்கு உறிஞ்சிய பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக எண்ணெயில் வருத்துத்தெடுத்த கருவேப்பிலையை அதில் போட்டு சாம்பார் அல்லது உங்களுக்கு பிடித்த சாதத்தில் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்