புரட்டாசியில் மீன் வறுவல் சாப்பிட முடியவில்லை என்று கவலை படுகிறீர்களா.! இந்த மாதிரி செய்து செய்து சாப்பிடுங்கள்..!

Advertisement

வாழைக்காய் மீன் வறுவல் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! புரட்டாசி மாதத்தில் மீன் சாப்பிட முடியவில்லை என்று கவலை படுகிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாழக்கையை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வாழைக்காய் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும். இதனால் நிறைய நபர்கள் சாப்பிடமாட்டார்கள். வாயு பிரச்சனை உள்ளவர்களும் இந்த மாதிரி வாழைக்காயை வறுத்து சாப்பிடலாம். வாங்க எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ புரட்டாசி பொறந்துடுச்சினு கவலை கொள்ள வேண்டாம் சாம்பாருக்கு சைடிஷ் கறிவருவல்போல உருளைக்கிழங்கு வறுவல்

வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  1. வாழைக்காய்-1
  2. இஞ்சி, பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
  3. மிளகாய் தூள் -தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் -தேவையான அளவு
  5. மல்லித்தூள் -தேவையான அளவு
  6. சோம்பு – சிறிதளவு
  7. வெங்காயம் –1
  8. தக்காளி –1
  9. உப்பு- தேவையான அளவு

வாழைக்காய் வறுவல் செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் வாழக்கையை நீட்ட வடிவில் நறுக்கி கொள்ளுங்கள். பின்பு வெங்காயம் சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள். பின் தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அடுத்து அடுப்பை பற்ற வையுங்கள். அதில் கடாயை வையுங்கள். 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

ஸ்டேப்:3

தக்காளி சுருங்கிய பதம் வந்தவுடன் நறுக்கிய வாழக்கையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வாழைக்காய் வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு நுனிக்கியது சேர்த்து வதக்கவும். பின் சேர்த்த பொருட்கள் எல்லாம் வாழைக்காயில் இறங்கும் வரை வதக்கவும்.

ஸ்டேப்:4

பின் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து சுருள சுருள வதக்கவும். முக்கியமானது வாழைக்காய் உடையாமல் பிரட்டி விடுங்கள்.

ஸ்டேப்:5

பின் பச்சை வாசனை இல்லாமல் வாழைக்காய் மொறுமொறுவென்று வந்துவிட்டால் அடுப்பை அணைத்து விடவும்.

அவ்ளோ தாங்க சூப்பரான வாழைக்காய் வறுவல் ரெடி..! ருசிக்கலாம் வாங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement