Vazhaipazham Paniyaram Recipe in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான தித்திக்கும் வாழைப்பழத்தில் பணியாரம் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். வாழைப்பழம் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். பணியாரம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுபோல வாழைப்பழத்தில் பணியாரம் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
காரைக்குடி கார பணியாரம் செய்வோம் வாங்க..! |
வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- வாழைப்பழம் – 3
- நெய் – 2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- பால் – 3/4 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
வாழைப்பழ பணியாரம் செய்முறை:
செய்முறை -1
முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் ரவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
செய்முறை -2
பின் அதில் சிறிய துண்டுகளாக நறுக்கி வாழைப்பழத்தை ரவையுடன் சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
செய்முறை -3
பிறகு அதில் 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை -4
எல்லாவற்றையும் நன்றாக வறுத்த பின் அதில் முக்கால் கப் பால் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
செய்முறை -5
பால் ரவை எல்லாம் நன்றாக வெந்து வந்தவுடன் அதில் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து 20 நிமிடம் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.
செய்முறை -6
பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி 10 நிமிடம் வரை ஆற வைக்க வேண்டும். பிறகு கைகளில் நெய் தடவி கொண்டு இதை உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்.
செய்முறை -7
பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு இந்த உருண்டைகளை வைத்து வேகவைக்க வேண்டும்.
பணியாரம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! அனைவருக்கும் பிடித்த வாழைப்பழ பணியாரம் ரெடி..! இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
பத்தே நிமிஷத்தில் ஈஸியான முட்டை பணியாரம் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |