வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க! சட்டி காலியாகிடும்

Updated On: June 30, 2025 1:11 PM
Follow Us:
vendakkai kara kulambu seivathu eppadi
---Advertisement---
Advertisement

வெண்டைக்காய் காரக்குழம்பு

பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என யாரும் அதிகமாக சத்துள்ள காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள். அதனை நாம் என்ன தான் சமைத்து கொடுத்தாலும் கூட அவற்றை சாப்பிட மறுப்பார்கள். அந்த வகையில் வெண்டைக்காய் ஆனது குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அதிகமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் வெண்டைக்காயில் பல வகையான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை வழவழப்பு தன்மை உடையதால் இதை சாப்பிடுவதற்கு மறுப்பார்கள். அதற்காக தான் இந்த பதிவில் வெண்டைக்காயுடன் வேர்க்கடலை சேர்த்து காரக்குழம்பு செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அவை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த முழு பதிவை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பச்சை வேர்க்கடலை – 1/2 கப்
  • எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
  • வெண்டைக்காய் – 200 கிராம்
  • தக்காளி – 2
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – 1/4
  • மிளகாய் தூள் – 1தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • புளி – பெரிய எலுமிச்சை அளவு
  • சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 கப்

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் – 1 டேபிள் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 10 பல்
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • வெல்லம் – 1 1/2 தேக்கரண்டி
  • கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்
  • மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

வெண்டைக்காய் காரக்குழம்பு செய்முறை:

முதலில் வேர்க்கடலையை வேக வைத்து கொள்ள்வும். அதன் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளி எடுத்து ஊற வைத்து கொண்டு அதிலிருந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, வெண்டைக்காயை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெண்டைக்காய் ஆனது சுருங்கும் தன்மை வர வரைக்கும் வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீராகிதூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கையால் பிசைந்து கொள்ள வேண்டும். இதிலையே புளிச்சாறு ஊற்றி, ஒரு கப் தண்ணீர், சாம்பார் தூள் சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதில்  சிறிதளவு காஸ்மீறி மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்க வேண்டும். பின் இதனுடன் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய், கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா, வேர்க்கடலை போன்றவை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

ஒரு 5 நிமிடம் கொதித்த பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயிலே 20 நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் பிரிந்த நிலை வரும்போது மிளகு தூள் சிறிதளவு, கொத்தமல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.

வெண்டைக்காய் மசாலா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now