Vendhaya Kanji Recipe in Tamil
இந்த வெயிலுக்கு என்ன சாப்பிடுவது, உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வெயில் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தில் அம்மை, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவாகவும், எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. அதற்கு தான் நம்முடைய பதிவில் வெந்தயத்தை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..