வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெண்பூசணி ஜூஸ் நீங்க எப்படி செய்வீங்க

Updated On: April 17, 2025 12:18 PM
Follow Us:
venpoosani juice recipe in tamil
---Advertisement---
Advertisement

வெண்பூசணி ஜூஸ் செய்முறை

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவுமுறையை சாப்பிடாமல் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். காரணம் பணத்தை சம்பாதித்து செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்று ஓடுகிறார்கள். ஆனால் உண்மையில் மிகப்பெரிய செல்வம் ஆரோக்கியம் என்று பலரும் உணர்வதில்லை. ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் பணத்தை சேமிக்க முடியும் என்று எண்ணம் இருப்பதில்லை. பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை, இருக்கிறது. இந்த உடல் பருமன் பிரச்சனை இருந்தாலே உடலில்  இதயத்தில் பிரச்சனை,  நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள், தூக்க பிரச்சனை மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் தருகிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருப்பதற்கு உடல் பருமனை சரியான எடையில் வைத்திருப்பது அவசியமானது. அதனால் தான் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க கூடிய சிறந்த ஜூஸை பற்றி பார்க்க போகிறோம்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • வெண்பூசணி – 2 கப் (தோலுரித்து விதை நீக்கி, நறுக்கியது)
  • புதினா இலைகள் – 15
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

ஜூஸ் செய்முறை:

வெண்பூசணி ஜூஸ் செய்முறை

வெண்பூசணியை மேல் உள்ள தோலை சீவி எடுத்து விட வேண்டும். உள்பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த வெண்பூசணி சதையுடன் இஞ்சி, சீரகம், புதினா போன்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இதனை வடிக்கட்டி சாறாக எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸை காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் என்று 2 மாதங்களுக்கு குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நீங்களே பார்ப்பீர்கள். மேலும் முக்கியமாக இந்த ஜூஸ் தான் எடுக்கிறோம் என்று நினைத்து கொண்டு உணவுகளில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட கூடாது. உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இந்த ஜூஸ் எல்லாமே சேர்ந்தால் தான் உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும்.

வெண்பூசணி ஜூஸ் நன்மைகள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now