ரோட்டு கடை ஸ்டைலில் வேர்க்கடலை தக்காளி சட்னி செய்முறை..! கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க..!

Advertisement

வேர்க்கடலை தக்காளி சட்னி செய்முறை – Verkadalai Chutney

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இந்த இரண்டு சட்னியை மட்டும் தான் இட்லி, தோசைக்கு சைடிஷாக செய்வாங்க. அதை சாப்பிட்டு சாப்பிட்டு பெரும்பாலானோருக்கு சலிச்சி போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்று நாம் ரோட்டு கடை ஸ்டைலில் வேர்க்கடலை தக்காளி சட்னி செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இந்த சட்னி செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் மற்றும் அதற்கான செய்முறை விளக்கத்தை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வேர்க்கடலை – 2 ஸ்பூன்
  2. கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் – 1
  4. பூண்டு – 3
  5. தக்காளி – 2
  6. காய்ந்த மிளகாய் – 8
  7. புளி சிறிதளவு
  8. சீரகம் – 3/4 ஸ்பூன்
  9. உப்பு – 3/4 ஸ்பூன்
  10. பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
  11. எண்ணெய் – 3 தேக்கரண்டி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எப்போதும் இட்லி தோசையா அப்போ இந்த டிஸ் செய்து பாருங்கள்

தாளிப்பதற்கு:

  1. எண்ணெய் – 2 தேக்கரண்டி
  2.  கடுகு – 1 ஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் – 1
  4. கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை விளக்கம் – Verkadalai Chutney:verkadalai chutney

அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வாணலி நன்கு சூடானதும் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின் அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து ஆறவைத்துகொள்ள வேண்டும்.

பின் அதே வானெலியில் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, புளி, சீரகம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு உப்பு, பெருங்காயம் சேர்த்து தக்காளி நன்றாக குழைந்து போகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைந்ததும் இவற்றை தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

பின் மிகஸி ஜாரில் முதலில் வருதுவைத்துள்ள கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை செய்து கொரகொரப்பாக அறிந்துகொள்ளுங்கள்.

பிறகு வதக்கி வைத்துள்ள தக்காளி , பூண்டு , வெங்காயம், புளி கலவையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கலந்து விட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், பிரட் போன்ற உணவுகளுக்கு ஏற்ற சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement