கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? (wheat sweet recipe)..!
godhumai sweet in tamil: கோதுமை மாவில் என்னென்ன செய்யலாம்? பொதுவாக நாம் அனைவரது வீட்டிலும் கோதுமை மாவில் சப்பாத்தி அல்லது பூரி என்ற உணவுகளை மட்டும் தான் செய்வோம். இருப்பினும் இந்த கோதுமை மாவை வைத்து ஒரு சுவையான கோதுமை ஸ்வீட் செய்தால் எப்படி இருக்கும்.? கவலைய விடுங்க நம்ம பொதுநலம் பகுதில் இதற்காகவே கோதுமை மாவை வைத்து ஒரு சூப்பரான ரொம்ப டேஸ்ட்டான கோதுமை ஸ்வீட் (wheat sweets) செய்யலாம் வாங்க… இந்த கோதுமை ஸ்வீட் (wheat sweets) சாப்பிடுங்க அப்பறம் குலாப் ஜாமுனை மறந்துடுவீங்க..!
மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..!
கோதுமை ஸ்வீட் (Godhumai sweet in tamil) செய்ய தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – ஒரு கப்
- கோதுமை மாவு – 1/2 கப்
- ஏலக்காய் பவுடர் – ஒரு ஸ்பூன்
- பால் – 1 கப்
- நெய் – ஒரு ஸ்பூன்
- குங்குமப்பூ – தேவையான அளவு
- தண்ணீர் – இரண்டு கப்
- எண்ணெய் – 1/2 லிட்டர்
கோதுமை ஸ்வீட் செய்முறை (wheat sweets recipe making):
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 1
முதலில் நாம் பாகு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அவற்றில் ஒரு கப் சர்க்கரை மற்றும் இரண்டு கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் சிறிதளவு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 2
சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் சிறிதளவு பாகை, கையில் தொட்டு பாருங்கள், பாகு கைகளில் ஒட்டி பிசுபிசுப்பு தன்மையுடன் இருந்தால் பாகை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை…
குறிப்பு: (பாகு சாதாரணமாக நாம் குலாப் ஜாமுன் செய்வதற்கு , பாகு செய்வோம் அல்லவா அதே போலத்தான் பாகு தயார் செய்ய வேண்டும்.)
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 3
இப்போது நாம் கோதுமை மாவை வைத்து எப்படி (wheat sweets recipe making) செய்வது என்று இப்போது நாம் காண்போம்.
இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக்கொள்ளுங்கள், அவற்றில் ஒரு கப் காய்ச்சிய பசும் பாலை ஊற்றுங்கள்.
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 4
பின்பு ஒரு ஸ்பூன் ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறிவிடுங்கள், பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கப் பாலுக்கு 1/2 கப் கோதுமை மாவை சேர்த்து கட்டிகள் விழாமல் நன்றாக கிளறிவிடுங்கள்.
கோதுமை மாவு, சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை கிளறி எடுங்கள்.
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 5
மாவு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
பின்பு மாவை தங்களது கைகளால் நன்றாக சிறிது நேரம் அழுத்தி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மாவை வடைபோல் அழுத்தி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 6
பின் அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து 1/2லி எண்ணெய் ஊற்றுங்கள், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மாவை அவற்றில் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு பொரித்த இந்த கோதுமை மாவை பாகில் சேர்த்து சிறிது நேரம் வரை நன்றாக ஊறவைக்கவும்.
கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? ஸ்டேப்: 7
அவ்வளவு தான் கோதுமை ஸ்வீட் தயார்… இந்த கோதுமை ஸ்வீட் (wheat sweets recipe making) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். உங்க வீட்டில் Try செய்து பாருங்கள்..!
உங்கள் சப்பாத்தி பஞ்சி போல சாஃப்டா உப்பி வர இப்படி…
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |