செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Serena Williams Net Worth in Tamil

Serena Williams Net Worth in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா..? செரீனா வில்லியம்ஸ் தனது 3 வயதில் இருந்து டென்னிஸ் விளையாடி வருகிறார். இவருக்கு டென்னிஸ் மீது இருந்த ஆர்வம் இவரை ஒரு சிறந்த வீராங்கனை ஆக மாற செய்தது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த  செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? இன்று இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் பாருங்கள் –> கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

செரீனா வில்லியம்ஸ் வரலாறு:

Serena Williams Net Worth in Tamil

 

செரீனா வில்லியம்ஸ் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 தேதி சகினா மிச்சிகன் என்ற ஊரில் பிறந்தார். ரிச்சர்டு வில்லியம்ஸ் மற்றும் ஆரசின் பிரைஸ் என்ற தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தனர். அதில் நான்காவது பெண் குழந்தையாக பிறந்தவர் தான் செரீனா வில்லியம்ஸ்.

இவர் தனது 3 வயதில் இருந்து தனக்குள் டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற ஆசையை வளர்த்து கொண்டார். இவருக்கு 9 வயது இருக்கும் போது இவருடைய குடும்பம் புளோரிடாவிலுள்ள கிழக்கு பாம் பீச் என்ற மாகாணத்திற்கு குடி பெயர்ந்தார்கள்.

அந்த பகுதியில் இருந்த ரிக்கி மக்சியின் டென்னிஸ் அகாதமியில் செரீனா வில்லியம்ஸ் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு இருந்த மக்சி என்பவர் இவருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கினார்.

இங்கிலாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு எவ்வளவு..? 

இவர் மகளிர் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசை பட்டியலில் ஒற்றையர் ஆடும் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழு முறை எட்டியவர் என்ற பெருமையை பெற்றார். செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 செரீனா வில்லியம்ஸ் 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள் மற்றும் இரண்டு கலப்பினப் பட்டங்கள் அதேபோல நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்கள் பெற்று உலகின் ஐந்தாவது பெண் டென்னிஸ் ஆட்டக்காரராக திகழ்ந்து வருகிறார்.  

செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் 3 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல, ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது சாதனைக்குரிய விஷயமாகும்.

தன்னுடைய முயற்சியால் இத்தனை பட்டங்களையும் பதக்கங்களையும் வென்ற இவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம் வாங்க..!

தற்போது  2022 ஆம் ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு தோராயமாக $260 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்திற்க்கு டென்னிஸ் விளையாட்டில் 30 முதல் 40 மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  

செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் என்ற ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று $2.5 மில்லியன் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. உலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் செரீனா வில்லியம்ஸ் 31 ஆவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் பாருங்க –> மூன்றாம் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com