அசை என்றால் என்ன? | Asai Endral Enna
அசை எத்தனை வகைப்படும்: வணக்கம் நண்பர்களே இன்றைய இலக்கண பகுதியில் அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும் என்று தெரிந்துகொள்ளலாம். இலக்கணம் சார்ந்த கேள்விகளானது போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினா விடைகளாகும். படிக்கும் மாணவர்கள் தேர்வில் எளிமையாக மதிப்பெண் பெற இலக்கணம் பகுதிதான் முதலில் இருக்கிறது. இலக்கணத்தை எளிமையான முறையில் புரிந்து படித்தால் நிறைய மதிப்பெண்களை பெறலாம். சரி வாங்க இந்த பதிவில் அசை என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் என்று படித்தறியலாம்..
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
அசை என்றால் என்ன?
அசை என்றால் என்ன: மொழியில் எழுத்தின் ஒலி – அளவை மாத்திரை என கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை என்று கூறுகிறார்கள்.
அசை எத்தனை வகைப்படும்?
அசை இரண்டு வகைப்படும், அவை:
- நேரசை
- நிரையசை
நேரசை என்றால் என்ன?
தனிக்குறில் அல்லது தனி நெடில் மெய்யெழுத்துடன் சேர்ந்தோ அல்லது சேராமலோ வருவது நேரசை எனப்படும்.
நேரசை எடுத்துக்காட்டு:
- ‘அ’ தனிக் குறில்
- ‘இல்’ தனிக் குறிலும் மெய்யும்
- ‘ஆ’ தனி நெடில்
- ‘ஆல்’ தனி நெடிலும் மெய்யும். (இவைகளை ஓரசைச் சீர்கள் எனவும் கொள்ளுதல் வேண்டும்)
நேரசை நான்கு நிலைகளில் வரும்:
- குறில் எழுத்து மட்டும் தனித்துவரும்.
க _ குறில் எழுத்து - குறில் எழுத்தோடு ஒற்றும் இணைந்து வரும்.
கல் _ குறில் + ஒற்று - நெடில் எழுத்து மட்டும் தனித்து வரும்.
கா _ நெடில் எழுத்து - நெடில் எழுத்தோடு ஒற்றும் இணைந்து வரும்.
கால் _ நெடில் + ஒற்று
அணி இலக்கணம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? |
நிரையசை என்றால் என்ன?
இரு குறில் அல்லது குறில் நெடில் இணைந்து மெய்யெழுத்தோடு சேர்ந்தோ, சேராமலோ வருவது நிரையசை எனப்படும்.
நிரையசை எடுத்துக்காட்டு:
- ‘அடி’ இரு குறில்
- ‘அருள்’ இரு குறிலும் மெய்யும்
- ‘அவா’ ஒரு குறில் அதன்பின் ஒரு நெடில்
- ‘விடாய்’ ஒரு குறில், அதன்பின் நெடில் அதன்பின் ஒரு மெய்.
நிரையசை நான்கு நிலைகளில் வரும்:
- இரண்டு குறில் எழுத்துகள் மட்டும் தனித்து வரும்.
கிளி _ இரண்டு குறில் எழுத்துகள் - இரண்டு குறில் எழுத்துகளோடு ஒற்றும் இணைந்து வரும்.
மயில் _ இரண்டு குறில் + ஒற்று - குறில் எழுத்தோடு நெடில் எழுத்தும் சேர்ந்து வரும்.
புறா _ குறில் நெடில் எழுத்துகள். - குறில் நெடில் எழுத்துகளோடு ஒற்றும் இணைந்து வரும்.
இறால் _ குறில் நெடில் + ஒற்று
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |