Adakkam Ethir Sol in Tamil
எதிர்சொல் என்பது ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். பொதுவாக இரட்டை சொற்களாக இரு எதிர்மாறான பண்புகளை இச்சொற்கள் கொண்டிருக்கும். அந்த வகையில் தமிழ் மொழியில் நிறைய எதிர் சொற்கள் உள்ளன அவற்றில் ஒன்று தான் அடக்கம். சரி இந்த பதிவில் அடக்கம் என்பதற்கு எதிர்சொல் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அடக்கம் எதிர்ச்சொல்:
- அடக்கத்தின் எதிர் சொல் அடங்காமை ஆகும்.
அடக்கம் என்பதன் பொருள்
- பணிவு
- புதைத்தல்
- அடக்கம் = விலை – இந்த கணினியின் அடக்கம் எவ்வளவு?
- தாழ்வு
அடக்கம் என்பது நம் செயல்களையும் எண்ணங்களையும் மிதப்படுத்தும் தரம் என்று அழைக்கப்படுகிறது. யாருக்கு அடக்கம் இருக்கிறதோ, அவன் நற்பண்புகளையோ அல்லது அவன் செய்த சாதனைகளையோ மற்றவர்களுக்கு முன்பாகப் பெருமைப்படுத்த மாட்டான், ஆனால் அவனுடைய நிலை அல்லது நிபந்தனையின் எல்லைக்குள் அடங்குவான், மேலும் சில சமூக மற்றும் தனிப்பட்ட வசதிகளின்படி நடந்துகொள்வான்.
அடக்கம் திருக்குறள்:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |