அண்டம் என்றால் என்ன?

Advertisement

அண்டம் என்பது என்ன?

பொதுநலம். காம் வாசக்காரர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் படிக்கும் மாணவர்களுக்கும், பாடம் சொல்லி கொடுக்கும் ஆசியர்களருக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும். அதாவது அண்டம் என்றால் என்ன என்பதை பற்றி தான் படித்தறிய போகிறோம். இது போன்ற பொது அறிவு விஷயங்களை தெரிந்து வைத்து கொள்வது அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அண்டம் என்றால் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

அண்டம் என்றால் என்ன?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் தான் அண்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அண்டத்தில் ஐந்து பஞ்ச பூதங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவை நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் நிலம் இந்த ஐந்து பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டுந்தான் இந்த உலகம் என்கின்ற அண்டம் இங்கி வருகிறது. இது மாட்டு மின்றி சூரியன், சந்திரன், புதன், வியாழன், வெள்ளி செவ்வாய், சனி மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்த படைப்பும் ஐந்து மூலப்பொருட்களாக கருதப்படும் பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று குறைந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ இந்த அண்டத்தில் தோன்றவோ, வாழ்வோ வழிகள் இல்லை.

இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்கள் மற்றும் கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

அண்டம்:

அண்டம் தோன்றிய போது அது மிகப் பெரிய ஆற்றலோடு (energy) தோன்றியது. அப்போதுதான் காலம் (time) என்ற ஒரு கோட்பாடே உருவாகியது; அதுவே காலத்தின் தொடக்கம். அப்போது அண்டத்தின் ஆற்றல் அடர்த்தி (energy density) மிக மிக அதிகமாக இருந்தது. அண்டத்தின் இந்த நிலை 10−43 நொடிகள் (seconds) நீடித்தது. அண்டம் இவ்வாறு இருந்த காலக் கட்டத்தை Planck epoch (ப்ளாங்க் காலக் கட்டம்) என்று கூறுவர். இந்த ப்ளாங்க் காலக் கட்டத்தில் அண்டத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது புவி ஈர்ப்பு (gravity) என்ற விசை (force) மட்டுமே. அதற்குப் பிறகு, அண்டம் திடுமென, 10−32 நொடிகளில் மிகப் பெரிதாக ஆயிற்று. இந்த நிகழ்வுக்கு cosmic inflation (அண்ட வீக்கம்)என்று பெயர். அண்ட வீக்கம் என்ற ஒன்று உண்மையில் நடந்ததே என்று பல செய்முறை ஆய்வுகளில் (experimental research) தெரிய வந்துள்ளது. அண்ட வீக்கத்துக்குப் பிறகு, அன்று தொடங்கி இன்று வரை அண்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஊது பை (balloon) போன்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது. பல செய்முறை ஆய்வுகள் அண்டம் விரிவடைந்து கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன.

அண்டத்தில் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy) மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நமக்கு அருகில் உள்ள விண்மீன் குழுக்களை விட மிகத்தொலைவில் உள்ள குழுக்கள் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றன. இது மட்டுமன்றி, இந்த விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதை எட்வின் அபள் (Edwin Powell Hubble) என்ற அமெரிக்க வானியல் ஆய்வாளர் கண்டு பிடித்தார். விண்மீன் குழுக்கள் மிக வேகமாகப் போவதைப் பார்த்துத்தான் எட்வின் அபள் நம் அண்டம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னார்.

விண்மீன் குழுக்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதற்குக் காரணம் என்ன?

அண்டம் வெடித்துச் சிதறும் போது விண்மீன் குழுக்களின் வேகம் நாள் தோறும் குறைந்து கொண்டே போக வேண்டுமே அல்லாது வேகம் அதிகரித்துக் கொண்டு போவது ஏன்? இதற்குக் காரணம் அண்டத்தில் மறைந்து கிடக்கும் ஒருவகையான dark energy எனப்படும் மறை ஆற்றல் (கருப்பு ஆற்றல்) காரணமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பற்றி சரிவரத் தெரியாததால், அண்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு விரிவடைந்து கொண்டு போகும், இறுதியில் அதன் முடிவுதான் என்ன, என்பன போன்ற கேள்விகட்கு இன்னும் விடை கிடைக்காமலேயே இருக்கின்றது.

நம் அண்டத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளையும் நான்கு அடிப்படை விசைகளை வைத்துக்கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்த நான்கு அடிப்படை விசைகளாவன:

  • பொருள் ஈர்ப்பு விசை (gravitational force),
  • மின்காந்த விசை (electromagnetic force),
  • மென்விசை (weak interactions),
  • அணுவின் கருப் பெருவிசை (strong nuclear force) (பார்க்க: அடிப்படை விசைகள்).

இதில் அண்டத்தின் இயக்கத்தைப் பேரளவில் கட்டுப் படுத்துவது gravitational force எனப்படும் பொருள் ஈர்ப்பு (புவி ஈர்ப்பு) விசையே.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement