Lucky Dreams in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே இரவு தூங்கும் போது ஏதாவது கனவு வருவது இயல்பான விஷயம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கனவுகள் வருவதுண்டு. அப்படி நாம் காணும் அனைத்து கனவிற்கும் அதிர்ஷ்டமான பலன்கள் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்று கூறிவிட முடியாது. இருப்பினும் நாம் காணும் ஒரு சில கனவுகள் அதிஷ்டமான கனவுகள் என்று சொல்லலாம். கனவுகளில் அதிர்ஷ்டமான கனவுகள் எது என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
யாளி சிலை கனவில் வந்தால் என்ன பலன்?
உங்களுடைய கனவுகளில் பழங்காலத்தில் கட்டப்பட்ட இந்து கோவில்களில் இருக்கும் யாளி சிலையை பார்த்தால். அந்த கனவு அதிர்ஷ்டமான கனவுகள் என்று சொல்லலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அதாவது வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நல்ல வியாபார வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
அதிர்ஷ்டம் தரும் கனவு:
உங்களுக்கு தெரியாத ஏதோ ஒரு இடம் தீப்பிடித்து எரிவது போல் கனவு வந்தால், தங்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமைய போகிறது என்று அர்த்தமாகும். ஆனால் எரிவது போன்று கனவு வந்தால், உங்கள் வீட்டில் பொருட்கள் திருட்டு போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதிர்ஷ்டம் அளிக்கும் கனவுகள்:
உங்களுடைய கனவில் வீட்டின் முன் வாயில் கதவு திறந்திருப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம். நீங்கள் புதிதாக செய்யும் தொழில் மற்றும் வேலைகளில் அதிக லாபம் பெறப்போகிறீகள் என்று அர்த்தமாகும்.
நீளமான கூந்தல் உள்ள பெண் கனவில் வந்தால் என்ன பலன்?
உங்களுடைய கனவில் நீளமான கூந்தல் உள்ள பெண் வந்தால் என்ன பலன் என்று தங்களுக்கு தெரியுமா? அந்த கனவானது மிகவும் அதிர்ஷ்டமான கனவாகும். அதாவது பெண்கள் மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
அதிர்ஷ்டம் அளிக்கும் கனவுகள்:
உங்களுடைய கனவில் ஓடும் குதிரையோ அல்லது ஓடும் குதிரையில் நீங்கள் சவாரி செய்வது போல் கனவு வந்தால் புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
நடனம்:
நடனம் ஆடுவது போல கனவு கண்டால் நல்ல சகுனம் ஆகும். எதிர்காலத்தில் நடக்க இருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உங்களுக்கு உணர்த்துகிறது என்று அர்த்தம்.
அதிர்ஷ்ட கற்கள்:
அதிர்ஷ்ட கற்களை கனவில் கண்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் என்று அர்த்தம். திருமணத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
சூரியன் அல்லது சந்திரன் கனவில் வந்தால்:
சூரியன் அல்லது சந்திரன் கனவில் தோன்றினால் குடும்பம் வலுப்பெறும் என்று அர்த்தம். நல்ல கல்வி, நல்ல வேலை உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். வானவில்லை கனவில் கண்டால் நல்ல சகுனம் மேலும் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரக்கூடும்.
கனவு பலன்கள் | All Kanavu Palangal in Tamil |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |