அன்னையர் தினம் எப்போது 2024

Advertisement

உலக அன்னையர் தினம் எப்போது | World Mother’s Day in 2024

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக அன்னையர் தினம் எப்போது 2024 என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. தினமும் ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் Mother’s Day ஒவ்வொரு ஆண்டும் அம்மாவை போற்றி வணங்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் உலகில் பல பகுதிகளில் வெவ்வேறு தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலும், மார்ச் அல்லது மே மாதங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

World Mother’s Day in 2024 in Tamil:

உலக அன்னையர் தினம் எப்போது

அன்னையர் தினம் என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபரின் தாய், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் தாக்கம் ஆகியவற்றைப் பெருமைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் நாள் ஆகும்.

அன்னை இல்லையென்றால் நாம் இல்லை. எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையிலும், வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும்,  ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

அந்தவகையில்,  இந்த ஆண்டு அன்னையர் தினம் மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908 ஆம் ஆண்டில் கொண்டாட தொடங்கப்பட்டது. 

அதாவது, 1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் அவர்கள், மே மாதத்தில் வரும் 2 வது  ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை.. உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.!

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2024

அன்னையர் தினம் தேதி:

ஆண்டு  தேதி  கிழமை 
2024 12 ஞாயிற்றுக்கிழமை 
2023 14 ஞாயிற்றுக்கிழமை 
2022 08 ஞாயிற்றுக்கிழமை 
2021 09 ஞாயிற்றுக்கிழமை 
2020 10 ஞாயிற்றுக்கிழமை 
2019 மே 12 ஞாயிற்றுக்கிழமை 

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement