டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள்..!

Advertisement

Ambedkar Sinthanaigal in Tamil

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக அம்பேத்கர் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நம் நாட்டு மக்களுக்காக போராடிய தேச தலைவர்களில் இவரும் ஒருவர். நம் நாட்டு மக்களுக்காக சாதி ஒழிப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து போராடியவர். இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

இப்படி நம் தேசத்திற்காக போராடிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 1891-ம் ஆண்டு இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால், தாயின் பெயர் பீமாபாய் ஆகும். மேலும் அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி ஆகும். மேலும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி அம்பேத்கர் அவர்களின் சிந்தனை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கரின் சிந்தனைகள்:

Ambedkar Sinthanaigal

எப்பொழுதுமே டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் பெரிதாகவும், மக்களுக்காகவும் தான் இருக்கும். அதை நாம் படித்தாலே நமக்குள் ஒரு வீரமும், தைரியமும் கிடைக்கும் என்றே சொல்லலாம். அப்படி நம்மை மீட்டு எழவைக்கும் அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

  • அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
  • வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்..! உங்கள் திறமையையும், நேர்மையையும் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன் வருவான்.
  • எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான்.
  • மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் உனக்கு தேவையில்லை.
  • ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
  • மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமானால் அரசியல் அமைப்பு, மக்களின் சமூக மற்றும்  பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத் தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது.
  • சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும் வரை தீ போல சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.

அம்பேத்கர் புரட்சி வரிகள்

  • ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல. அதனால் ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்..!
  • இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் பயன் இல்லை.
  • கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.
  • கடவுளுக்கு செலவிடும் பணத்தை உன் குழந்தையின் படிப்புக்கும், அவர்களின் எதிர்கால தேவைகளுக்கும் செலவிடு அது உன்னையும் உன்னை சார்ந்த பிறரையும் வாழவைக்கும்.
  • சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம், அதை இழந்து வாழ்வது மிகப்பெரிய அவமானம்.
  • தன்னை உயர்ந்த ஜாதியாகவும் பிறிதொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் ஒரு மனநோயாளி.
  • சாதிதான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
  • அடிமையாக வாழ்க்கை நடத்தும் ஒருவனுக்கு தான் அடிமையாக அவமானப்படுத்தப்படுவதை புரியவை..! பிறகு அவன் தானாகவே அடிமைச்சங்கிலியை உடைத்தெறிய கிளர்ந்தெழுவான்.
  • ஜாதி உன்னுடைய அடையாளம் அல்ல அது உன்னுடைய மற்றும் மனித குலத்தின் அவமானம்.
  • ஆயிரம் ஆண்டுகாலம் அடிமையாக வாழ்வதைவிட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து மடிவது சிறப்பு.
  • நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் போது பகைவன் கூட நம்மை மதிப்புடன் பார்ப்பான்.
  • உழைப்பவன் அடிமையுமில்லை ஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை.
  • வாழ்க்கை நீளமானதாக இருக்கவேண்டியஅவசியமில்லை. அது சிறப்பானதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.
  • நான் யாருக்கும் அடிமையாக இல்லை. அதே வேளையில் எனக்கும் யாரும் அடிமையாக இல்லை.

அண்ணல் அம்பேத்கர் கட்டுரை

  • எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு கீழேயும் ஒருவரும் இல்லை.
  • எவன் ஒருவன் தன் உரிமைகளை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ, எவன் ஒருவன் தன் பொது விமர்சனங்களுக்கு அச்சப்படாமல் இயங்குகிறானோ, எவனொருவன் சுய சிந்தனை சுய மரியாதையுடன் நிகழ்கிறானோ அவனையே சுதந்திரமான மனிதன் என்பேன்.
  • ஒரு மனிதனை அச்சமற்றவனாக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையை கற்பித்து தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னுடைய உரிமைக்காக போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி.
  • ஒரு லட்சியத்தை கையிலெடுங்கள் அதை அடைவதற்கு விடா முயற்சியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்..!
  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்றே மூன்று தான். அவை அறிவு, சுயமரியாதை, நன்னடத்தை.
  • ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் புரட்சி, இந்த மூன்று விஷயங்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்டு ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
  • அடிமையாக வாழ்வது தான் நமக்கு கிடைத்த கதி என்னும் எண்ணத்தை முதலில் குழிதோண்டி புதையுங்கள்..!
  • சாதியை பிடித்து கொண்டு அலைபவர்கள் அனைவருமே தேசவிரோத சக்திகள் தான்.
  • நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக நீ போராட துணியவில்லை என்றால், அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடே நீ தான்..!

அம்பேத்கரின் சமூக பணிகள் என்ன தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement