அம்பேத்கர் புரட்சி வரிகள்..!

Advertisement

அம்பேத்கர் பற்றிய புரட்சி வரிகள்

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று சாதியை எதிர்த்து போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை பற்றி சில புரட்சி வரிகளை இங்கு காண போகின்றோம். பொதுவாக அம்பேத்கர் பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.

அம்பேத்கர் சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் இல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவ மேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் சிறந்து விளங்கியவர். அப்படி வரலாற்றில் சிறந்து விளங்கிய நம் அம்பேத்கர் பற்றிய புரட்சி வரிகளை பற்றி தற்போது காணலாம் வாங்க..!

அம்பேத்கர் புரட்சி வரிகள்:

  1. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
  2. பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
  3. ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
  4. எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
  5. தீண்டாமை என்பது சாதித் துவேஷத்தில் இருந்து வளருகிற ஒன்று. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக் கூடியதல்ல.
  6. சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது.
  7. ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே.
  8. ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
  9. எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
  10. பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
  11. தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.
  12. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
  13. மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
  14. உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
  15. குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
  16. இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகிவிடுகிறது.
  17. சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
  18. சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
  19. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
  20. மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும் அல்லது அறத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து போகும்.
  21. ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.
  22. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.!
  23. உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
  24. தன்னை உயர்ந்த ஜாதியாகவும், பிறரை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி.
  25. ஒரு அடிமைக்கு முதலில் அவன் அடிமை என்பதை உணர்ந்து, பிறகு அவனே தானாக கிளர்ந்தெழுவான்.
  26. சமூக விடுதலை அடையாமல், சட்டம் என்ன சுதந்திரம் வழங்கியிருந்தாலும் அது பயன் தராது.
  27. மனிதர்களை போல அவர்கள் சிந்தனைகளும் அழியக்கூடியதுதான். எனவே, செடி உயிர் வாழ எவ்வளவு நீர் தேவையோ அதே அளவு சித்தாந்தங்களும் பரப்ப பட வேண்டும்.
  28. மனதையும் சிந்தனையும் பயன்படுத்துவதே மனித வாழ்வின் பெரும் லட்சியமாக இருக்க வேண்டும்.
  29. சமத்துவம் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாத கற்பனை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், மனிதராக இருந்தால் சமத்துவத்தை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.
  30. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை கற்பிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement