அல்லி வேறு பெயர்கள் | Alli Flower Other Names in Tamil..!

Advertisement

அல்லி வேறு பெயர்கள் | Alli Flower Other Names in Tamil..!

ஆரம்ப காலத்தில் எல்லாம் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பெரும்பாலும் வீட்டில் குளிக்க மாட்டார்கள். ஏனென்றால் அதற்கு பதிலாக குளம், குட்டை மற்றும் வாய்க்கால், ஆறு என இதுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் தான் குளிப்பார்கள். இது நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் ஒரு பழக்கமாகவே இருந்தது. இவ்வாறு குளிக்கும் போது குளத்தில் அதிகமாக தாமரை, அல்லி என இதுபோன்ற மலர்கள் குவிந்து காணப்படும். ஆனால் இந்த கால தலைமுறையினருக்கு இவற்றை எல்லாம் அதிகமாக தெரிவதும் இல்லை, அவற்றை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இதற்கான வேறு பெயர்கள் பற்றியும், அதனுடைய அம்சம் பற்றியும் தெரிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆகவே இன்று அல்லியின் வேறு பெயர்கள் என்ன என்பதையும், அதனின் சிறப்பு பற்றியும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அல்லி வேறு பெயர்கள்:

  • ஆம்பல்

• கைரவம்

  • குமுதம்

எனவே அல்லி என்ற மலரை குறிக்கும் வேறு பெயர்கள் மேலே சொல்லப்பட்டுள்ளவை ஆகும்.

அல்லி பற்றிய தகவல்கள்:

 அல்லி வேறு பெயர்கள்

அல்லி என்று சொல்லப்படும் ஆம்பல் மலரானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சங்க காலத்து இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் 50 வகையான கொடிகளும் இருக்கிறது.

இப்படிப்பட்ட அல்லி மலரானது முற்றிலும் நீர் நிலைகளில் வளரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இந்த அல்லி மலர்கள் அனைத்து இடங்களிலும் இருப்பது இல்லை. அதாவது குளம், சிறிய ஆறு, பொய்கை என இத்தகைய இடங்களில் மட்டுமே பூக்கிறது.

அதுபோல் இந்த அல்லி மலர் இரவில் மலர்ந்து காலை நேரத்தில் வாடக்கூடிய தன்மை கொண்டது. மேலும் மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா , மலேசியா, வங்காளதேசம், இந்தியா, இலங்கை, யுன்னான், தைவான், பிலிப்பீன்சு, கம்போடியா, மற்றும் லாவோஸ் என இத்தகைய நாடுகளில் அதிகமாக பூக்கிறது.

இத்தகைய அல்லி என்ற ஆம்பல் மலரானது வெள்ளை, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மற்றும் ஊதா என பல வகையான நிறங்களில் மாறுபடுகிறது.

அல்லி மலரின் இலைகள் வட்ட வடிவத்திலும் இதய வடிவிலானது போலவும் 15 முதல் 26 செ.மீ அளவு உள்ளது போலவும் காணப்படுகிறது.

மேலும் இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்ட ஒன்றாகவும் உள்ளது.

அல்லி பூ in English:

தமிழில் அல்லி என்று சொல்லப்படும் பூவானது ஆங்கிலகத்தில் Water Lily என்று அழைக்கப்படுகிறது.

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement