ஆடி தள்ளுபடியா..? போலி தள்ளுபடியா..? தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

ஆடி தள்ளுபடி 2022 – Aadi Thallupadi 2022

இந்த ஆடி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்த இரண்டு விஷங்கள் தான் ஒன்று அம்மன் வழிபாடு, மற்றொன்று ஆடி தள்ளுபடி. துணிக்கடையில் தள்ளுபடி என்றவுடன் பலர் படையெடுத்து சென்றுவிடுவார்கள். அப்படி என்னதான் இருக்கு இந்த ஆடி தள்ளுபடியில், இது உண்மையான தள்ளுபடியா, அல்லது ஏமாற்று வேலையா என்பதை நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

ஆடி தள்ளுபடி உண்மையா? ஏமாற்று வேலையா?

உண்மையில் ஆடி தள்ளுபடி என்பது ஒரு வியாபார தந்திரம் ஆகும். அப்படி ஒரு தள்ளுபடியே‌ இல்லை. நீங்கள் ஒரு புடவை எடுத்தீர்கள் என்றால் அதில் 50% தள்ளுபடி என்று சொல்வார்கள், உண்மையில் அப்படி தள்ளுபடி செய்து கிடைக்கும் கடைசி விலைதான் அந்த புடவையின் உண்மையான விலை ஆகும். இன்னொரு தந்திரம் ஒரு புடவை எடுத்தால் இன்னொன்று இலவசம் அல்லது இரண்டு இலவசம் என்று கூறுவது.

நமது மக்கள் இலவசம் என்றாலே என்ன ஏது என்று யோசிக்காமல் உடனே சென்று வாங்கி விடுவார்கள். அவ்வாறு இலவசம் கொடுத்தால் கடைக்காரருக்கு எப்படி வருமானம் கிடைக்கும் என்று யோசிக்கமாட்டார்கள்.

அந்த ஒரு புடவையிலையே அவர்கள் இரண்டு புடவைக்கு உள்ள பணத்தை பறித்து விடுவார்கள். இந்த ஆடி தள்ளுபடி என்பது உண்மையில் அவர்களிடம் உள்ள பழைய சரக்குகள் விற்கும் தந்திரம் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்றால் ஆடிக்கு முன் ஒரு புடவையும், அதே புடவையே ஆடி தள்ளுபடியிலும் எடுத்து பாருங்கள் இரண்டும் ஒரே விலை தான் வரும். ஆடி தள்ளுபடி என்பது முழுக்க முழுக்க ஒரு வியாபாரதந்திரமே , இப்பொழுது புரிகிறதா? துணி கடையை மட்டும் சொல்லவில்லை.. எந்த கடையாக இருந்தாலும் அவர்கள் தள்ளுபடி என்று சொன்னதும் ஆறுவத்தில் சென்றுவிடாதீர்கள்.. இனியாவது மக்களே ஆடி தள்ளுபடி என்றவுடன் உங்கள் பணத்தை வீண்செலவு செய்யாதீர்கள்.. நன்றி வணக்கம்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement