ஆதாரம் வேறு சொல்
நாம் தமிழில் நிறைய மொழிகளும், அர்த்தங்களும் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் சிறிது காலம் மட்டும் போதாது. ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும் பல அர்த்தத்தங்களை குறிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் ஒரு பொருள் தரும் பல சொற்கள் என்றும், ஒவ்வொரு சொல்லுக்கு என்று உள்ள தமிழ் பொருள் என்றும் இதுபோல பலவற்றை தமிழில் அடங்கியுள்ளது. அதேபோல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு என்று தனித்துவமான அர்த்தங்களும், விளக்கங்களும் உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு அந்த அளவிற்கு தெரியுமா என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது. அதனால் இன்று ஆதாரம் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..!
Aadharam Veru Sol:
ஆதாரம் என்ற சொல்லிற்கான வேறு சொல் அனைத்தும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
- அஸ்திவாரம்
- முட்டு
- அடிப்படை
- சான்று
- அத்தாட்சி
- சாட்சி
- ஸ்தானம்
Aadharam Meaning in Tamil:
பொதுவாக யாரையும் நாம் குற்றம் செய்தவர்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் அக்குற்றத்தை அவர்கள் தான் புரிந்தார்கள் என்று பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு முதலில் நமக்கு ஏதாவது ஆதாரம் வேண்டும்.
அந்த வகையில் இவ்வாறு ஒரு செயலை நியபடுத்துவதற்கோ அல்லது சுட்டி காட்டுவதற்கோ தேவைப்படும் ஒன்றே ஆதாரம் எனப்படும். மேலும் இத்தகைய ஆதாரம் என்ற சொல் ஆனது இடத்திற்கு தகுந்தாற் போல் மாறுபடும்.
இவை குற்றத்திற்கு மட்டுமில்லை நீங்கள் அலுவலகத்தில் எதாவது நிலம் அல்லது வீடு போன்றவற்றிக்கு பதிவிட போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அங்கு வேலைபார்ப்பவர்கள் இவை உங்களுடைய நிலம் தான் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்று கேட்பார்கள். அதுமட்டுமில்லை வேலையில் ஜாயின் செய்ய போகிறீர்கள் என்றால் அங்கே நீங்கள் உங்களுடைய சான்றிதழ் எல்லாம் எடுத்துட்டு வாருங்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் நீங்கள் Resume-ல் இந்த படிப்பு படித்திருக்கிறேன் என்று பதிவிட்டுருப்பீர்கள். அவர்கள் எப்படி அதனை நம்புவார்கள் அதற்காக தான் ஆதாரமாக கேட்பார்கள்.
சட்டத்தில் ஒருவர் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு சாட்சி தேவைப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
நீங்கள் இவர் மீது தொடுத்துள்ள குற்றத்திற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா..?
நீங்கள் இவருடைய பையன் தான் என்ன சாட்சி என்று கேட்பார்கள்.
ஆதாரம் Meaning in English:
ஆதாரம் என்ற சொல்லுக்கான ஆங்கில வார்த்தை Evidence என்பது ஆகும்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |