ஆன்லைன் பத்திர பதிவு செய்வது எப்படி
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம். Document Registration என்பது தங்களுடைய சொத்துகளை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியுடன் ஒரு ஆவணத்தை பதிவு செய்து அசல் நகல்களை பாதுகாக்கும் முறையாகும்.
பத்திர பதிவிற்காக தமிழ்நாடு அரசு ஒரு வெப்சைட் வெளியிட்டுள்ளது. அந்த வெப்சைட் மூலமாகவோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ பதிவு செய்து கொள்ளலாம். சரி வாங்க நாம் Online-ல் Document Registration செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பத்திரம் பதிவு செய்வது எப்படி:
- முதலில் Google-ல் tnreginet.gov.in என்ற இனையதளத்தை Type செய்து உள் நுழையவும்.
- பின் தங்களது பெயரில் அக்கௌன்ட் CREATE செய்து கொள்ளவேண்டும் அதற்கு முதலில் உள்நுழைக என்பதில் கீழே பயனர்பதிவு என்று இருக்கும் அதனை Click செய்து கொள்ளவும்.
பத்திர பதிவு ஆன்லைன் – ஸ்டேப்: 2
- அதன் பிறகு பயனர் வகைப்பாடு என்ற இடத்தில் குடிமக்கள் அல்லது ஆவண எழுத்தர் என்று ஏதேனும் ஒன்றை Select செய்து கொள்ளுங்கள். ஆவண எழுத்தர் என்று Select செய்தால் License இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் ஆதலால் குடிமக்கள் என்பதையே Select செய்யுங்கள்.
பத்திர பதிவு செய்வது எப்படி:
Pathira Pathivu – ஸ்டேப்: 3
- குடிமக்கள் என்பதை click செய்துவிட்டு தங்களது விவரங்களை உள்ளிடவும். பிறகு தாங்கள் எந்த தொலைபேசி எண் மற்றும் Mail ID கொடுத்தீர்களோ அந்த எண்ணிற்கு OTP வரும் அதனை உள்ளிட்டு பிறகு பதிவினை முடிக்க என்பதை Click செய்தவுடன் தங்கள் பெயரில் அக்கௌன்ட் CREATE ஆகிவிடும்.
பத்திர பதிவு ஆன்லைன் – ஸ்டேப்: 4
- பிறகு முகப்புப் பக்கம் வரவும். அதில் பதிவு செய்தல் என்பதை Click செய்தால் ஆவண பதிவு என்று வரும். அதில் ஆவணத்தினை உருவாக்குக என்பதை Click செய்யவும்.
பத்திர பதிவு- ஸ்டேப்: 5
- பின் அவற்றில் ஆவணத்திற்கான நன்மை என்ற இடத்தில் தெரிவு செய்க என்பதை click செய்யவும். அதில் தங்கள் எந்த விதமான பத்திரத்தை பதிவு செய்ய போகிறீர்களோ அதை Select செய்து கொள்ளுங்கள்.
- Select செய்த பிறகு தங்களுடைய ஆவண எண் தெரிந்தால் முந்தைய ஆவணத்தை இணைப்பு செய்க என்பதை Click செய்யுங்கள் இல்லையென்றால் தொடர்ந்து செயல்படுத்தவும் தொடர்க என்பதை Click செய்யுங்கள்.
பத்திர பதிவு ஆன்லைன் – ஸ்டேப்: 6
- பிறகு சார்பதிவாளர் அலுவலகம், புத்தக எண், சார்பதிவாளர் எண், ஆண்டு, ஆவண எண், ஆவண வகைப்பாடு முதலிய விவரங்களை உள்ளிட்டு சேர்க்க என்பதை Click செய்யுங்கள். சேர்க்க என்பதை Click செய்தவுடன் ஆவணம் யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர்களுடைய விவரங்கள் அனைத்தும் வந்துவிடும்.
பத்திர பதிவு செய்வது எப்படி? – ஸ்டேப்: 7
- பிறகு தொடர்ந்து செயல்படுத்தவும் தொடர்க என்பதை Click செய்யுங்கள்.
பத்திர பதிவு செய்வது எப்படி:
ஸ்டேப்: 8
- பின் கட்சிக்காரரின் விவரங்கள், சொத்து விவரங்கள், கைமாற்று தொகை, உடன்படிக்கை விவரங்கள், சொத்து பெறப்பட்ட விவரக்குறிப்புகள், ஆதார விவரங்கள், ஆவண மதிப்பீடு என 7 Subtitle தோன்றும் ஒவ்வொரு பகுதியையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்துவிட்டு சேமிக்க, அடுத்து மற்றும் சேமிக்க தொடர்க என்று கொடுக்கவும்.
ஆன்லைனில் அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி |
ஸ்டேப்: 9 – பத்திர பதிவு:
கட்சிக்காரரின் விவரங்கள்:
- எழுதி கொடுப்பவர் விவரங்கள், எழுதி வாங்குபவர்கள் விவரம், பிரதிநிதியின் விவரங்கள், சாட்சிகளின் விவரங்கள், தாக்கல்/ திரும்பப்பெறுவோர் விவரங்கள் ஒவ்வொரு பகுதியையும் பூர்த்தி செய்து விட்டு சேர்க்க என்பதை Click செய்தவுடன் தங்கள் உள்ளிட்ட விவரங்கள் தோன்றும் பின் அடுத்து என்பதை Click செய்யுங்கள்.
- அனைத்து விவரங்களையும் உள்ளிட்டவுடன் சேமிக்க மற்றும் தொடர்க என்பதை Click செய்யுங்கள்.
பத்திர பதிவு ஆன்லைன்:
ஸ்டேப்: 10
சொத்து விவரங்கள்:
- அதன் பிறகு சொத்து விவரங்கள் தோன்றும். எந்த வகை சொத்து என்பதை Click செய்தவுடன் சார்பதிவாளர் அலுவலகம், அஞ்சல் குறியிட்டு எண், பிளாக் எண், பதிவு மாவட்டம்,தாலுக்கா, பட்டா எண், பதிவு கிராமம், வார்டு எண், வருவாய் மாவட்டம், உள்ளாட்சி மன்றம், வழிகாட்டி கிராமம், வார்டு எண் அனைத்திலும் தங்களது விவரங்களை உள்ளிட்டு அடுத்து என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதனை உள்ளிட்டு பின் புல விவரங்கள் என்பதில் அளவுகளின் அளவை சதுர மீட்டர் அல்லது சதுர அடி என்பதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்யவும். பின் புல எண், தெரு பெயர், உரிமை மாற்றும் பரப்பிசை, தெரு பெயர் மற்றும் சதுர அடி என்ன என்பதை உள்ளிடுங்கள். மீதம் இருக்கும் Details விருப்பப்பட்டால் உள்ளிடலாம் இல்லையென்றால் தேவை இல்லை. சேர்க்க என்பதை Click செய்து விட்டு அடுத்து என்பதை உள்ளிடுங்கள்.
- எல்லை விவரங்கள் என்பதில் வடக்கில், மேற்கில், கிழக்கில், தெற்கில் என்ன உள்ளது என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
- சொத்தின் அளவுகள், கட்டிடத்தின் அளவுகள், சொத்து விவர குறிப்புகள் மற்றும் சொத்து விவர ஆவணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து விட்டு சேர்க்க என்பதை Click செய்து அடுத்து என்பதை கிளிக் செய்யுங்கள்.
பத்திர பதிவு செய்வது எப்படி?
ஸ்டேப்: 11
- கைமாற்று தொகை, உடன்படிக்கை விவரங்கள், ஆதார விவரங்கள், ஆவண மதிப்பீடு ஒவ்வொறு பகுதியையும் பூர்த்தி செய்துவிட்டு சேமிக்க மற்றும் தொடர்க என்பதை கிளிக் செய்து தங்களது பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
இது போன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |