வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரக்கம் என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா..?

Updated On: March 29, 2025 11:27 AM
Follow Us:
Irakkam Veru Sol in Tamil
---Advertisement---
Advertisement

இரக்கம் வேறு சொல் | Irakkam Veru Sol in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான இரக்கம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

இரக்கம் என்றால் என்ன..? | Irakkam Meaning in Tamil

மனிதர்களிடம் அன்பு, கோபம், கருணை, இன்பம் போன்ற குணங்களில் அடங்கியது தான் இரக்கம். இந்த குணமானது ஒவ்வொரு சூழலிலும் வெளிப்படும். இந்த குணங்களை ஒரே வார்த்தைகளில் அழைக்கலாம். அதனைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர் இரக்கம் என்றால் என்ன, அவற்றின் வேறு சொற்களை பற்றி தெரிந்து கோல் கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

இரக்கம் என்ற சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் அது பயன்படுத்தப்படும் சூழலைப் பொறுத்தது. பொதுவாக அனைத்து உயிர்கள் மீதும் எதிர்பார்ப்பில்லாத அன்பே இரக்கம் எனக் கூறலாம்.

அதாவது இரக்கம் என்பது மற்றொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்களிடம் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.

இரக்கம் என்பது ஒரு ஆளுமைப் பண்பாக மற்ற உயிரினங்களுடன் எதையாவது பகிர்ந்து கொள்ளும் திறன், நன்றியுணர்வு போன்றவற்றால் அறியப்படுகின்றது. மேலும் இரக்கம் என்பது நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு மட்டுமல்லாது நல்ல செயல்களைச் செய்ய வல்ல சக்தியெனலாம்.

மேலும் துக்கமான நேரத்தைக் கடந்து செல்லும் ஒரு நபருக்கு ஒருவர் காட்டும் ஒரு கனிவான அணுகுமுறை எனலாம்.

ஒருவருக்கு முடியவில்லை என்றால் அவர் மீது கருணை கொள்வது இயல்பான ஒன்று. அதனால் உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யுங்கள். மற்றவர்கள் மீது கருணை கொள்ளுங்கள். கருணை என்பது எல்லார் மனிதர்களிடத்திலும் இருக்க வேண்டிய குணமாக இருக்கிறது. அதனால் உங்களின் நற்குணங்களில் கருணையை வளர்த்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு:

சாலையில் ஒருவர் கால் முடியாதவர் நடந்து செல்கிறான். அவரை யாராவது வண்டியில் ஏற்றி செல்லலாம் அல்லவா கொஞ்சம் கூட இரக்கம் இல்லை.

இன்றைக்கு செல்வி உணவு எடுத்து வரவில்லை, அவளுக்கு உணவு கொடுக்க யாருக்கும் கருணை இல்லை.

இரக்கம் வேறு சொல்:

இரக்கம் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள்,

  • அருள்
  • கருணை
  • பரிவு
  • கிருபை
  • தயவு
  • அன்பு
  • ஈவு

இரக்கம் in english:

இரக்கம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • Kindness
  • Pity
  • Sympathy
  • Consideration
  • Lenity
  • Compassion
ஜோடி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா
மகிழ்ச்சி என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா இது தெரியாம போச்சே 
மேகம் வேறு சொல்
உதவி வேறு சொல்
நடனம் வேறு சொல்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now