இரண்டு வரி வாழ்க்கை தத்துவம் | Iru Vari Valkai Thaththuvam in Tamil..!
பொதுவாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் மொத்தமாக 7 பிறவிகள் என்று கூறுவார்கள். அதில் ஒரு பிறவியாக நாம் மனித வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறோம். இத்தகைய வாழ்க்கை முறையில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விட வாழ்க்கையில் நடக்கும் சோகமான நிகழ்வு மற்றும் துன்பங்களை நினைத்து தான் அதிக அளவில் கவலைப் பட்டு கொண்டு இருக்கின்றோம். அதோடு மட்டும் இல்லாமல் என்னடா வாழ்க்கை இது என்று புலம்பவும் செய்வோம். அது மட்டும் இல்லாமல் இத்தகைய நிலையில் இருக்கும் போது ஏதேனும் வாழ்க்கை தத்துவம் மற்றும் பொன்மொழிகளை கூறுவது மற்றும் கேட்பதன் மூலம் மனது கொஞ்சம் லேசாகி விடும் என்பது நம்முடைய ஒரு எண்ணமாக இருக்கிறது.
இரு வரி தத்துவம்:
- நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை தண்டனை என்பது மதிப்பற்றதே.
- எளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து விஷயங்களும் கடினமானதே.
- நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
- பணம் முட்டாளுக்குக் கூட அறிவாளி நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
- அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
- உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் சக்திமிக்க மனிதர்களாகத் திகழ்வர்.
- உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.
- பலருக்கு கண்களுண்டு, பகுத்தறியும் ஆற்றல் சிலருக்கே உண்டு.
- அறிவுத் தேவையைவிட, கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கிவிடுகிறது.
- சிரிக்கத் தெரியாதவனும், சிந்திக்கத் தெரியாதவனும் வாழ்வில் சிறப்புப் பெறுவதே இல்லை.
- இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.
இரண்டு வரி பொன்மொழிகள்:
- கருணைதான் பெருந்தன்மையின் அடையாளம்.
- பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.
- தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.
- தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும்.
- மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
- ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே.
- வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகிவிட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.
- இலக்கு இல்லாத மனிதன், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவன்.
- ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல; அதனை அறியவேதான்.
- தவறு என்று எதையும் உணராமல் இருப்பதே தவறுகளில் தலையாயது ஆகும்.
இரண்டு வரி கவிதைகள்:
- அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்..? நீயே உன் காவலன்
- அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே..! உன் மனதில்
உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே..!
- இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.
காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.
- புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை..!
புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை..!
- உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்- ஆனால்
எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே..!
- உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்த கூற்று..!
- சிரிக்கின்ற உதடுகள் தான்..!
சிதைக்க பட்ட இதயத்தின் வாசல்..!
- உன்னை அடையாளம் கண்டேன்
என் அடையாளத்தை தேடுகிறேன்..!
மெய் எழுத்துக்கள் சொற்கள்