ஈகை பொருள் விளக்கம் | Eegai Meaning in Tamil

Eegai Meaning in Tamil

ஈகை என்றால் என்ன | Eegai Endral Enna | ஈகை தமிழ் அர்த்தம்

eegai meaning in tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஈகை என்பதற்கு அதன் அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் அதனுடைய சரியான அர்த்தம் அனைவர்க்கும் தெரியும் என்று சொல்லமுடியாது. தெரியாத வார்த்தைக்கு அதன் சரியான அர்த்தத்தை தெரிந்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. வாங்க இந்த பதிவில் ஈகை என்பதர்க்கு அதன் சரியான அர்த்தத்தை (ஈகை பொருள்) படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள்

குறள் 221:

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

கலைஞர் விளக்க உரை:

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

மு.வ விளக்க உரை:

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

குறள் விளக்கம்:

திருவள்ளுவர் இந்த குறள் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் என்றால் வறுமை நிலையில் வாழும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதே கொடை அளிப்பதாகும். மற்றவர்களிடமிருந்து கைமாறு எதிர்பார்க்காமல், புண்ணியம் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே கொடை. இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

அன்பும் அறனும் திருக்குறள் பொருள்

முழுப்பொருள்:

மிகவும் வறுமை நிலையில் இருந்து உதவி என்று கேட்பவர்க்கு இல்லை என்று கூறாமல் நம்மால் இயன்ற உதவியை செய்தல், பசியால் வாடுபவர்களுக்கு பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும். ஒரு பொருளும் இல்லாத ஏழை எளியவர்களுக்கு தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து உதவி செய்வதும் ஈகை பண்பாகும். புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்று ஈதலால் புகழ் பெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைத்துச் சொல்வார். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் நம்மிடம் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com