உதவி வேறு சொல்..! | Uthavi Veru Sol in Tamil

Advertisement

உதவி வேறு சொல்..! | Uthavi Veru Sol in Tamil..!

நாம் அனைவருக்குமே பொதுவாக ஒரு ஆசை இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக நம்மில் பலரும் முயற்சி செய்வோம் ஆனால் அது முழுமை அடைந்துள்ளது என்றால் இல்லை என்பதே உண்மை. இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொல்லுக்குமான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை.

அதிலும் குறிப்பாக நாம் அன்றாடம் பேசும் பல வார்த்தைகள் ஒரு வார்த்தையால் மட்டும் நமது தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் ஒரே பொருளுடைய பல வார்த்தைகள் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உதவி என்ற சொல்லுக்கான வேறு சொல் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உதவி வேறு சொல்:

 

“அறம் செய்ய விரும்பு” என்றார் ஔவையார். பிறருக்கு உதவுதல் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம் ஆகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் சுயநலத்துடனே நடந்து கொள்கிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் ஒருவர் துன்பப்படும் போது உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எவராவது ஆபத்தில் சிக்கிவிட்டாராயின் அவருக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.

உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் தெய்வத்திற்கு இணையாக பார்க்கப்படுகின்றனர். அதனாலேயே ஏழைகளுக்கு உதவி செய்பவனுக்கு அருகில் இறைவன் இருக்கிறான் என்று சமய தத்துவவாதிகள் கூறுகின்றனர். உதவி என்பதை யார் எவரென்று பாரபட்சம் பார்க்காமல் செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது.

அப்படி மிகப்பெரிய மனப்பான்மையை குறிக்கின்ற இந்த உதவி என்ற சொல்லுக்கான வேறு சொற்களை இங்கு காணலாம் வாங்க..

உதவி வேறு பெயர்கள்:

  • உபகாரம்
  • சகாயம்
  • ஒத்தாசை
  • கொடை
நடனம் வேறு சொல்
கதிரவன் வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement