உயர்வு நவிற்சி அணி
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உயர்வு நவிற்சி அணி என்றால் என்னெவென்றுதான் தெரிந்துகொள்ளபோகிறோம். இவை ஒரு அணி இலக்கணத்தை சார்ந்தவையாகும். தமிழ் இலக்கணத்தில் அணி என்பது அழகை குறிக்கும் ஒரு பொருளாகும். அணியானது ஒரு புலவர் வர்ணிக்கும் அழகாலும், பொருளாலும், சொல் அழகும் தோன்றும் கவிதைகளை மனம் குளிர மகிழ்ச்சி செய்வார்கள், இதனை தெளிவாக விளக்கும் இலக்கணமே அணி இலக்கணமாகும். மேலும் அணி இலக்கணம் என்றால் என்ன அதனுடைய எடுத்துக்காட்டுகளை தெளிவாக காணலாம் வாங்க.
அணி இலக்கணம் |
உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன:
- எதையும் ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.
- ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்திக் கூறுவது.
- தன்மை நவிற்சி அணிக்கு எதிர்மாறானது.
உயர்வு நவிற்சி அணி என்பது ஒரு பொருளின் இயல்பை அழகுபடுத்தி உயர்த்து கூறுவதே உயர்வு நவிற்சி அணி என்று சொல்லப்படுகிறது. அதாவது உயரமான மலையை விண்ணை தொடும் மலை என்று வர்ணிப்பதும். அதேபோல் குதிரை வேகமாக போவதை, குதிரை வேகமாக காற்றில் பாய்ந்து ஓடும் என்று அதனுடைய இயல்பை அழகுபடுத்தி கூறுவதே ஆகும்.
உயர்வு நவிற்சி அணி எடுத்துக்காட்டு:
எடுத்துக்காட்டு:1
கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு – எங்கள்
உறையூரின் காவலரே வாழிய நீடு
இந்த பாடலில் என்ன கூறிகிறார்கள் என்றால் கரையேறி மீன் வராது, அப்படி வந்தால் அது துடிதுடித்து இறந்துவிடும் என்றும் காவேரி நாடானது வளமிக்க ஓரு நாடு என்றும் அந்த வளத்தை விளக்குவதற்கு மீன் கரையேறி விளையாடும் என்றும் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டு:2
தூசியின்றித் தெளிந்தோடும்
துறையினிலே நான்
மூழ்கித் தொட்டதேதோ
பாசி என்றெண்ணிக்
கையாலே பறித்தெறியப்
பற்றினேனா?
கூசி எதிர்த் துறையில்
குளித்த இளங்குமரி
எந்தன் கூந்தலென்றாள்
தூசியே இல்லாத தெளிந்த நீர்துறையில். அக்கரையில் அவள் குளிக்கிறாள் என்றும் இக்கரையில் நான். ஏதோ கைப்பட பாசி என்று பற்றினேன். எதிர்துறையிலிருந்து அவள் என் கூந்தல் என்று கத்துகிறாள். அவ்வளவு நீளமான கூந்தல் என்று அழகை உயர்த்தி மிகைப்படுத்தி கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டு:3
விண்மீன்களைக் கேட்டால்
அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால்
ஏணியில் ஏறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக
ஊரைத் தருவார்கள்..
இந்த பாடலில் விண்மீன்களைப் பறிக்கவும், வானவில்லை ஒடிக்கவும் முடியாது என்றும் தனது மேல் உள்ள அன்பினால் தான் எதைக் கேட்டாலும் தனது அண்ணன் மார்கள் தருவார்கள் என்று ஒரு தங்கை சொல்வதாக அமைந்திருக்கும் இப்பாடலில் நடக்க முடியாத ஒரு விடயத்தை கவிஞர் இயற்கைக்கு மாறாக அதன் அன்பை உயர்த்திக் கூறியுள்ளார். இதுவே உயர்வு நவிற்சி அணியின் இயல்பு ஆகும்.
எடுத்துக்காட்டு:4
தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.
இப்பாடலில் கவிஞர் தயிரை கிடையும் ஆய மங்கையர்களின் தன்மை உடைவர் என்று அழகை வர்ணித்து கூறிருக்கிறார், இதுவே உயர்வு நவிற்சி அணி ஆகும்.
எடுத்துக்காட்டு:5
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
இப்பாடலின் கவிமணி தேசியம் விநாயகம் அவர்கள் பசுவும் கன்றும் ஒன்றுதான் என்று அது கொஞ்சு விளையாடுவதை இயல்பாக எடுத்துரைத்து உள்ளார்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |