உலகின் ஆபத்தான 5 சாலைகள்..!

most dangerous road

உலகின் ஆபத்தான சாலைகள்..! | Most Dangerous Road..!

ஹாய் பிரண்ட்ஸ் போக்குவரத்துக்காக இந்த உலகில் நிறைய சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அச்சுறுத்தும் வகையிலும் இந்த உலகின் மிக ஆபத்தான சாலைகள் இருக்கிறது அதனை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். உலகின் மிக ஆபத்தான 5 சாலைகளை பற்றி தான் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.  வாங்க உலகின் மிக மிக ஆபத்தான சாலைகளை பற்றி பார்க்கலாம்.

உலகின் ஆபத்தான சாலைகள்..!

The Road of Bones:

the road of bones

இந்த The Road of Bones என்ற சாலை ரஷியாவில் அமைத்துள்ளதாம். இந்த சாளக்கி நடுவில் ஆறு இருக்கு. இந்த ஆற்றை கடந்து தான் பயணிகள் பயணம் செய்ய முடியுமாம். இந்த ஆறு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டு தோறும் திறந்திருக்கும். இந்த மாதங்கள் என்பது மிகவும் அதிகமான குளிர்காலம் என்பதால் இந்த ஆற்றின் மேல் பனிகள் படர்ந்திருக்குமாம் இதன் காரணமாக இது ஒரு ஆறு என்று தெரியாமல் ஓட்டுனர்கள் வண்டியை சாதரணமாக ஓட்டும் போது அந்த ஆறுகளில் மாட்டி சில நேரங்களில் உயிரிழப்பு நிகழ்கிறது. பனி காலங்கள் தான் இப்படி என்று பார்த்தால் மற்ற நேரங்களில் இந்த ஆறுகளில் நடுவில் அதிக சேரும் சகதியுமாக காணப்படுமாம். இதன் காரணமாக ஒரே ஒரு வண்டி இந்த சாலையை கடந்து செல்வதற்கே சில மணி நேரங்கள் ஆகுமாம். இதன் காரணமாவே இந்த சாலை உலகின் மிகவும் ஆபத்தான சாலையாக சொல்லப்படுகிறது.

அட்லாண்டிக் பெருங்கடல் சாலை:

இந்த சாலை கடற்கடையன் நடுப்பகுதியில் அமைத்துள்ளது. 1980களில் இந்த பாலத்தை கட்ட ஆறு ஆண்டுகள் காலம் ஆகியுள்ளது. இதன் மொத்த நீளம் 22 மைல். மொத்தம் எட்டு பாலங்கள். உலகிலேயே மிக ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த சாலை நார்வேயில் அமைத்துள்ளது. இந்த பகுதில் வானிலையை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாதாம். வானிலை திடீரென்று மாறினால் இந்த சாலையை கடந்து செல்வது என்பது மிக மிக ஆபத்தான மற்றும் சவாலான ஒன்றாகும்.

​லக்சர் அல் ஹர்காதா சாலை – Luxor al Hurghada Road:

Luxor al Hurghada Road

எகிப்தில் உள்ள இந்த சாலை பகலில் பார்க்க சாதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், இரவு ஆகிவிட்டால் இதில் அடுக்கடுக்காக விபத்துகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இரவில் வாகன ஓட்டிகள் லைட்டை ஆஃப் செய்துவிட்டு பயணிக்கின்றனர். வாகன வெளிச்சத்தை கண்டால் கொள்ளை கும்பல்கள் தாக்குதல் நடத்துவார்களாம். லைட்டை ஆஃப் செய்துவிட்டு பயணிப்பதால் விபத்துகள் அதிகரிக்கின்றன.

உலகின் மிக ஆபத்தான நாய்கள்

​கோலியாங் டனல் சாலை:

most dangerous road

சீனாவில் இருக்கும் இந்த சாலை மலையிலேயே குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் வெறும் 0.75 மைல் என்றாலும், ஆபத்துக்கு குறைபாடில்லை.

​ஃபேரி மெடோஸ் சாலை:

fairy meadows road

இந்த சாலை பாகிஸ்தானில் அமைந்துள்ளது. உலகின் மிக ஆபத்தான சாலைகளில் ஒன்றான ஃபேரி மெடோஸில் இலகுவான இதயம் கொண்டவர்கள் பயணிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

உலகின் மிக ஆபத்தான இடங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News