உலக தண்ணீர் தினம்:
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி யாரும் இந்த உலகில் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது.
இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவம் அறியவே கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நாள் தண்ணீரின் சிறப்புகளைக் கூற மட்டுமல்ல, தண்ணீரின் அறியப்படாத உண்மைகள் மற்றும் தண்ணீரின் அவசியங்களை மக்களுக்கு உணர்த்துவதற்கான நாள் என ஐநா சபை தெரிவித்துள்ளது.
உலக தண்ணீர் தினத்தில் நீரைப் பயன்படுத்தும் உழவர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு குடிமக்களும் தண்ணீர் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவது, தெரிந்து கொள்வது, மாற்றுத் திட்டங்களை வடிவமைப்பது எனச் செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். சரி இந்த பதிவில் தண்ணீர் பற்றிய கவிதைகள் சிலவற்றை பார்ப்போம் வாங்க.
உலக ரோஜா தினம் |
உலக தண்ணீர் தினம் கவிதை:
ஒரு துளி நீரும்
இன்னொரு
உயிருக்கு
ம(வி)ருந்தாகும்
உலக தண்ணீர் தினம் கவிதை:
அன்பு கிடைக்காமல் கூட
இந்த உலகில் பல லட்சம் பேர்
வாழ்கின்றன..
ஆனால் தண்ணீர் இல்லாமல்
ஒருவரும் வாழ முடியாது.
தண்ணீர் நம் வாழ்க்கை
அதை வீணாக்காதீர்கள்..
சர்வதேச தண்ணீர் தினம் – ulaga thanneer thinam:
நீரின்றி அமையாது உலகு!
அதை முறையாக சேமிக்க பழகு!
உலக தண்ணீர் தினம் கவிதை:
இருக்கும் போது தெரிவதில்லை
நீரின் பெருமை!
தவிக்கும் போது தெரியும்
நீரின் பெருமை!
உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை:
ஒரு துளி அமுது
தேனீக்களுக்கு முக்கியம்
இரு துளி மருந்து
போலியோ ஒழிப்பிற்கு முக்கியம்
மூன்று துளி உயிரணு
உயிர்ப் பெருக்கத்திற்கு முக்கியம்
நான்கு துளி பன்னீர்
விழா வரவேற்பிற்கு முக்கியம்
ஐந்து துளி கண்ணீர்
தூய அன்பிற்கு முக்கியம்
ஆறு துளி விடம்
பாம்பின் பாதுகாப்பிற்கு முக்கியம்
இப்படி இயற்கையோடு
இயைந்து போன துளிகளின்
ஆதியும் அந்தமும் நீரே…
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபத சதம் நீரே
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே…
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே…
உயிர் நீரை சேமித்திடுவீரே…
வரும் தலைமுறைக்கு ‘நீர் வழி’ காட்டிடுவீரே..!
இயற்கை வளம் கட்டுரை |
நீரின்றி அமையாது உலகு கட்டுரை |
மரம் வளர்ப்போம் கட்டுரை |
மழைநீர் சேகரிப்பு கட்டுரை |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |