வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலக புவி தினம் பற்றிய சில தகவல்கள்..!

Updated On: April 22, 2024 12:30 PM
Follow Us:
World Earth Day 2024
---Advertisement---
Advertisement

World Earth Day 2024

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது இன்று என்ன நாள் என்று உங்களுக்கு தெரியுமா..? அதாவது இன்று நாம் வாழும் பூமியின் புவி நாள் தான் இன்று. அதாவது உலக புவி தினம் என்று சொல்கிறேன். ஒவ்வொரு வருடமும் உலக புவி தினமானது ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக உலக புவி தினம் பற்றிய தகவல்கள் மற்றும், உலக புவி தினம் எதனால் கொண்டாடப்படுகிறது போல பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உலக சுகாதார தினம் கட்டுரை

உலக புவி தினம் என்றால் என்ன: 

உலக புவி தினம் என்றால் என்ன

உலக உயிர்கள் உயிர் வாழ்வதற்கு தகுதியான இடமாக இருப்பது இந்த பூமி மட்டுமே என்று பல ஆய்வுகள் இன்றும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி அவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த பூமி, மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, அதாவது வாகன புகைகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்று மாசடைந்து, பூமி தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டு வருகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அதிலும் நாம் இப்படியே செய்து கொண்டு வந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் நம்மால் இந்த பூமியில் வாழ்வது என்பது கேள்விக்குறி ஆகிவிடும் என்று பல விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே இதுபோல, நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22 ஆம் தேதியை “உலக புவி தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்

உலக புவி தினம் அறிமுகப்படுத்தியவர் யார்..? 

1969 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் தான் ஜான் மெக்கானெல் (John McConnell) என்பவர்.

அவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர் என்றே சொல்லலாம். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் அதை காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

ஆகவே ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கட்டாயம் கொண்டாட வேண்டும் என்று மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று 175 நாடுகளில் “உலக புவி தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது.

 

உலக ஆரோக்கிய தின ஸ்லோகம்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now