உழைப்பாளர் தின பாடல்கள்
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் உழைப்பாளர் தின பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க. உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். உழைப்பின் பெருமை, அவசியம், சிறப்பு என அனைத்தையும் நம் முன்னோர்கள் நமக்கு பல வகைகளில் எடுத்துரைத்துள்ளார். கடின உழைப்பின் மூலம் மட்டுமே ஒருவரால் வெற்றி அடைய முடியும்.
இவ்வுலகில் உழைப்பினால் உயர்ந்தவர்கள் தான் அதிகம். ஆகையால், அவர்களை போற்றும் விதமாக, அதாவது, உழைப்பாளர்களை பாராட்டும் வகையில் இப்பதிவில் உழைப்பாளர் தின பாடல் வரிககளை விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள் உழைப்பாளர் தின பாடல்கள் மூலம் உலகில் உள்ள அனைத்து உழைப்பாளர்களையும் பாராட்டலாம்.
உழைப்பாளர் தின பாடல் வரிகள்:
உழைக்கின்ற மானிடரே..
உலகத்தின் ஆணிவேரே
கலைப்படையா உழைப்பாலே
காலம் முழுவதும் நிலைப்போரே..!
உச்சி வெயில் தாக்கினாலும்
கச்சிதமாய் பணி முடிக்கும் கல்மனது காரர்களே..!
தச்சுத்தொழில் செய்தாலும்
தவறில்லை தரணியிலே..!
காகிதமே பொறுக்கினாலும்
கட்டாயம் அதுவும் தொழிலே
ஆயுதங்கள் செய்தாலும் எ அத்தனையும் தொழில் தானே.!
தாகமென தவிப்போர்க்கு
தண்ணீரே பெருந்தெய்வம்
சோகமெல்லாம் தீர்ந்துபோகும் சுயமான உழைப்பாலே!
உழைப்புக்கு இந்நாளே
உயர்வான திருநாளாம்..
உண்மை தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம்..!
உழவுத் தொழில் பாடல் வரிகள்:
“நாலு மூலை சமுக்க வயல்
அதிலே நடும் குட்டப் புள்ளே
நான் போடும் நாத்துக்களை
நீ சேர்ந்து நட்டாலாகாதோ?
நாத்துப் பிடுங்கி வச்சேன்
நடுவத் தொளி ஆக்கி வச்சேன்
நாத்து நடும் பொம்பளையா
சேத்து நட மாட்டியளோ
பொட்டிட்டு மையிட்டு
பொய்யக் கரை தீர்த்தமாடி
நட்டுட்டுப் போற புள்ளை
நயன வார்த்தை சொல்லிரம்மா
ஒளவை உழவு தொழில்:
ஆற்றங்கரையில் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே- ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுஉண்டு வேறொரு பணிக்கு
உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..!
உழைப்பாளர் திருக்குறள்:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
மு.வரதராசனார் உரை:’
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |