எதிர்ச்சொல் பட்டியல்
எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். பொதுவாக இரட்டை சொற்களாக இரு எதிர்மாறான பண்புகளை இச்சொற்கள் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு இரவு – பகல், துன்பம் – இன்பம், ஆண் – பெண், மேலே – கீழே இது போன்று சொல்லக்கூடிய சொற்கள் அனைத்தும் எதிர்ச்சொற்கள் என்று சொல்லலாம். இது போன்று சொல்லக்கூடிய எதிர்ச்சொற்கள் என்ன இருக்கிறது என்று இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..
தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்:
| நல்வினை | தீவினை |
| வைதல் | புகழ்தல் |
| வாழ்த்துதல் | இகழ்த்தல் |
| கீழ்த்திசை | மேற்றிசை |
| வலம்புரி | இடம்புரி |
| வெம்மை | தண்மை |
| கனவு | நனவு |
| சிற்றிலக்கியம் | பேரிலக்கியம் |
| பழமை | புதுமை |
| நல்லவன் | கெட்டவன் |
| ஓடுமீன் | உறுமீன் |
| தெருள் | மருள் |
| நீதி | அநீதி |
| நிறை | குறை |
| பகை | நட்பு |
| அகம் | புறம் |
| இயற்கை | செயற்கை |
| ஆக்கம் | அழிவு |
| புகழ்ச்சி | இகழ்ச்சி |
| வறுமை | வளமை |
| ஓடா | ஓடும் |
| பெரிய | சிறிய |
| ஆண் | பெண் |
| வல்லினம் | மெல்லினம் |
| ஒற்றுமை | வேற்றுமை |
| பகல் | இரவு |
| சரி | தவறு |
எதிர்ச்சொல் பட்டியல் – Ethir Sol in Tamil:
| வெற்றி | தோல்வி |
| அந்தம் | ஆதி |
| அரிது | எளிது |
| அடைமழை | தூரல் |
| அமைதி | ஆரவாரம் |
| அரும்பொருள் | மலிவான பொருள் |
| அரைகுறை | முழுநிறை |
| அல்லங்காடி | நாளங்காடி |
| ஆமை வேகம் | மின்னல் வேகம் |
| இணக்கம் | பிணக்கம் |
| இரவலர் | புரவலர் |
| லாபம் | நட்டம் |
| ஒழுக்கம் | இழுக்கம் |
| குறும்புக்காரன் | நல்லவன் |
| கெடுமதி | நன்மதி |
| செல்வம் | வறுமை |
| தகுதி | தகுதியின்மை |
| ஞானக்கண் | ஊனக்கண் |
| தவநெறி | அவநெறி |
| தள்ளாமை | துடிதுடிப்பு |
| தீயவை | நல்லவை |
| திரிசொல் | இயற்சொல் |
| நலிவு | பொலிவு |
| தொகுதியெண் | பகுதியெண் |
| நாத்திகம் | ஆத்திகம் |
| பீடு | கேடு |
| புல்லறிவு | நல்லறிவு |
| புலமை | பேதைமை |
| பேதை | மேதை |
| மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |








