ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள்
என்ன தான் நாம் பல மொழிகளை பேசி , அதில் அதிகமாக வல்லமை பெற்று இருந்தாலும் கூட தமிழ் மொழியின் சிறப்பு ஆனது பலரையும் இங்கு வியக்கவைக்கும் வகையில் இருக்கிறது. அப்படி பார்க்கையில் ஜி.யு. போப், வீரமாமுனிவவர் என இவர்கள் தமிழ் மொழியின் சிறப்பினை கற்றல் திறன் வாயிலாக அறிந்து அதில் அதிகமாக தனக்கான இடம் பதித்து இருக்கிறார்கள். இதன் படி பார்க்கையில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என இவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் அதிகமாக அனைவரும் படித்த நூல்களாக கருதப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் தமிழ் மொழியில் எண்ணற்ற நூல்களை எழுதியவர்களின் பட்டியலை நாம் கணக்கிடவே முடியாது. இவற்றை எல்லாம் கணக்கிடவில்லை என்றாலும் கூட சில அடிப்படையான நூல்களை பற்றி தெரிந்து இருப்பது அவசியம். ஆகவே இன்று ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு:
- தமிழ் புலவராகிய ஒட்டக்கூத்தர் திருச்சி மாவட்டத்திலுள்ள மலரி என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கூத்தர் முதலியார் என்பதே ஆகும். காலப்போக்கில் இவரது பெருமைக்கு ஏற்றவாறே ஒட்டக்கூத்தர் என்ற பெயரானது வந்தது. அதாவது இவர் போட்டி வைத்து வேகமாக பாடுவதில் வல்லவர் என்பதினாலே இந்த பெயர் வந்தது.
- மேலும் இவர் ஒரு சிறந்த தமிழ் புலவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் மற்றும் விக்கிரம சோழன் என இவர்களுக்கு எல்லாம் அவை புலவராகவும் இருந்தார்.
- அதேபோல் ஒட்டக்கூத்தர் நளவெண்பா பாடலை எழுதிய புகழேந்தி புலவரது காலத்தில் வாழ்ந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த வகையில் புகழேந்தி புலவருக்கும், ஒட்டக்கூத்தருக்குமான போட்டி காண்போரை விறுப்பறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்க உதவும்.
ஒட்டக்கூத்தர் இயற்பெயர்:
- கூத்தர் முதலியார்
ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள்:
ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- கலிங்கப் பரணி
- மூவர் உலா
- ஈட்டியெழுபது
- தக்கயாகப் பரணி
- எழுப்பெழுபது
- நாலாயிரக் கோவை
- குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
- தில்லையுலா
- அரும்பைத் தொள்ளாயிரம்
- எதிர் நூல்
- காங்கேயன் நாலாயிரக் கோவை
- செங்குந்தர் பிரபந்தத் திரட்டு
- கம்பராமாயணத்தில் உத்திரகாண்ட் பகுதி
ஒட்டக்கூத்தர் சிறப்பு பெயர்கள்:
- காளக்கவி
- கவிச்சக்கரவர்த்தி
- ஊழுக்குக் கூத்தன்
- சக்கரவர்த்தி
- சருவஞ்ஞன கவி
- கவிராட்சதன்
- கௌடப் புலவர்
அந்தாதி பாடுவதில் வல்லவர் யார்:
இத்தனை விதமான சிறப்புகளை கொண்டுள்ளது மட்டும் இல்லாமல் அசையோ, சீரோ, அடியோ மற்றும் இறுதி எழுத்தோ என அதனை அடுத்து வரும் பாடலின் முதலில் வரும்படி ஒவ்வொரு பாடலிலும் பாடுவதில் சிறப்புமிக்க ஒருவராக இருந்த காரணத்தினால் இவருக்கு அந்தாதி பாடுவதில் வல்லவர் என்ற பெயரும் வந்துள்ளது.
சீறாப்புராணம் பற்றிய சிறு குறிப்புகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |