ஔவையார் எழுதிய நூல்கள் | Avvaiyar Noolgal

Avvaiyar Noolgal

ஔவையார் எழுதிய நூல்கள் | Avvaiyar Eluthiya Noolgal

ஔவையார் நூல்கள்: சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர் ஔவையார்.  இவர் சங்க காலம், இடைக்காலம், சோழர் காலம் போன்ற காலத்தில் வாழ்ந்தவர். இவர் 59 செய்யுள் பாடலை இயற்றியுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் யாவும் கவிதை நடையும், கருத்து மிகுந்த சுவையையும், பொருளையும் கொண்டுள்ளன. பல புகழ் பெற்றுள்ள ஔவையார் இயற்றிய நூல்களின் தொகுப்பை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஔவையார் நூல்கள் – Avvaiyar Eluthiya Noolgal:

சங்கப்புலவர்கள் இயற்றிய பாடல் தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடத்தை  பெற்றுள்ளார். ஔவை சங்க கால புலவர்களிலே சிறந்தவர்.

ஔவையார் நூல்கள் – Avvaiyar Eluthiya Noolgal
காலம்  நூல்கள் 
சங்க கால பாடல்கள் (கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன்) குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு
நீதி நூல்கள் (12-ம் நூற்றாண்டு) நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்
சமய நூல்கள் (14-ம் நூற்றாண்டு) ஔவை குறள், விநாயகர் அகவல்
சிற்றிலக்கியம் (17, 18-ம் நூற்றாண்டு) பந்தன் அந்தாதி

ஔவையார் இயற்றிய நூல்கள்:

1. ஆத்திசூடி – Avvaiyar Eluthiya Noolgal:

 • கடவுள் வாழ்த்து
 • உயிர் வருக்கம்
 • உயிர்மெய் வருக்கம்
 • ககர வருக்கம்
 • சகர வருக்கம்
 • தகர வருக்கம்
 • நகர வருக்கம்
 • பகர வருக்கம்
 • மகர வருக்கம்
 • வகர வருக்கம்

2. கொன்றை வேந்தன் – ஔவையார் நூல்கள் – அவ்வையார் நூல்கள்:

 • கடவுள் வாழ்த்து
 • உயிர் வருக்கம்
 • ககர வருக்கம்
 • சகர வருக்கம்
 • தகர வருக்கம்
 • நகர வருக்கம்
 • பகர வருக்கம்
 • மகர வருக்கம்
 • வகர வருக்கம்

3. மூதுரை – Avvaiyar Neethi Noolgal:

 • கடவுள் வாழ்த்து
 • நன்றி ஒருவர்க்கு

4. நல்வழி

5. நாலு கோடிப் பாடல்கள்

 • பாடல்கள்

6. தனிப்பாடல்கள்

 • அரியது
 • பெரியது
 • இனியது
 • கொடியது

ஆத்திசூடி – Avvaiyar Neethi Noolgal:

இந்த நூல் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மாணவர்களுக்கு உயிரெழுத்துக்களை எளிமையாக புரிந்து கொள்வதற்கும், வாழ்வில் முறைப்படி வாழவும், ஒழுக்கத்தை பின்பற்றும் வகையிலும் இந்த பாடல் அமைந்துள்ளது.

கொன்றை வேந்தன் – ஔவையார் நூல்கள்:

 • கடவுள்களில் முதன்மையாக இருக்கும் சிவனுக்கு கொன்றை மரத்தின் மலரை மாலையிடுவார்கள். அவரின் மகன்களுள் ஒருவரான முருகனை போற்றி பாடுவது இந்த நூல். இது ஒரு நீதி நூல் ஆகும். இந்த நூலில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

மூதுரை – Avvaiyar Noolgal – அவ்வையார் நூல்கள்:

 • மூதுரை என்பதற்கான பெயர்க்காரணம் இந்நூலில் கூறப்படும் அறங்கள் யாவும் பழமையான கருத்துக்களை கொண்டிருப்பதால் மூதுரை என பெயர் பெற்றது. இந்த நூலிற்கு வாக்குண்டாம் என்ற மற்றொரு பெயறும் உண்டு. இந்த நூலில் மொத்தம் 30 பாக்கள் உள்ளன.

நல்வழி – Avvaiyar Noolgal:

 • மக்களுக்கு உதவும் அற கருத்துக்களை இந்நூல் எடுத்துரைப்பதால் இந்த பெயரை பெற்றுள்ளது. இந்த நூலில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
சங்க இலக்கிய நூல்களின் பெயர்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil