ஒருவருக்கு கடன் கொடுக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

கடன் கொடுக்கும் முறை

வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது கட்டாயம் இருக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இருந்தால் தான் இந்த உலகில் வாழமுடியும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகின்றோம். பணம் தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர், உணவு மட்டும் தான் தேவை என்று நினைக்கிறோம். ஆனால் அந்த உணவையும் நீரையும் கூட நாம் இப்போது காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். அப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். அப்படி ஒருவருக்கு பணக்கஷ்டம் வந்தால் உடனே கடன் வாங்குகிறோம். அப்படி கடன் கேட்டு வருபவர்களுக்கு பணம் கொடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள். 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ஒருவருக்கு கடன் கொடுக்கும் முன் செய்ய வேண்டியவை: 

kadan kodukkum murai

ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தேவை என்பது கட்டாயம் இருக்கும். ஏதோ ஒரு காரணத்திற்காகவும் அவசர தேவைகளுக்காகவும் மற்றவர்களிடம் கடன் வாங்குகிறோம்.

அப்படி வாங்கும் போது சில நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் வட்டி இல்லாமல் கடன் கொடுப்பார்கள். ஆனால் சிலரோ வட்டிக்காகவே கடன் கொடுப்பார்கள். அதையும் குடும்ப சூழ்நிலை காரணமாக எவ்வளவு வட்டி இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி விடுவோம்.

ஆனால் அதை திருப்பி செலுத்தும் நேரத்தில் தான் பல பிரச்சனைகள் வரும். வாங்கிய கடனை சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என்றால், கடன் கொடுத்தவர்களுக்கு கோவம் தான் வரும். இப்படி வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் எத்தனையோ குடும்பங்கள் தவிக்கின்றனர்.

கடன் பத்திரம் எழுதுவது எப்படி

எனவே கடன் கொடுப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, கடன் பத்திரம் ஓன்று வாங்கி, அந்த பத்திரத்தில் கடன் ரூபாய், வட்டி விகிதம், கடன் வாங்கிய நாள், கடன் திருப்பி செலுத்த வேண்டிய தேதி, கால அவகாசம் மற்றும் ஜாமின் போன்ற விவரங்களை எழுதி கடன் வாங்குபவர் மற்றும் கடன் கொடுப்பவர் இருவரும் கையொப்பம் இடவேண்டும். 

இந்த கடன் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதையும் மீறி கடன் வாங்கியவர்கள் கடனை காலதாமதமாக கொடுத்தாலோ அல்லது கடன் கொடுக்க முடியாது என்று சொன்னாலோ நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்.

இப்படி வழக்கு தொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு தான் வழக்கு சாதகமாக முடியும். பணமும் விரைவாக கைக்கு வந்து சேரும்.

திருமணமான மகனின் சொத்தில் தாய்க்கு உரிமை உண்டா.. இல்லையா..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement