கடிகாரம் எப்படி இந்த உலகிற்கு அறிமுகம் ஆனது தெரியுமா.?

kadikaram in tamil

கடிகாரம் பற்றிய தகவல்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கடிகாரம் பற்றிய சில அருமையான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே கடிகாரம் இல்லாத வீடுகள் இருக்கவே இருக்காது, எல்லாருடைய வீட்டிலும் கடிகாரம் இருக்கும். ஆனால் இன்றிய காலகட்டத்தில் யாரிடமாவது மணி என்னவென்று கேட்டல் மொபைலை பார்த்து சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் கையில் இருக்கும் கை கடிகாரத்தை பார்த்து சொல்வார்கள், ஆனால் அந்த கை கடிகாரத்தை வாங்குவதற்கு அதிகமாகவே பாடுபடுவார்கள். அதிலும் இன்றைய காலத்தில் உள்ள பெண்கள் கைக்கடிகாரத்தை அவர்கள் அணியும் உடைகளின் நிறத்திற்கு  தகுந்தது போல் அணிகிறார்கள்.

கணினியை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..?

கடிகாரம் பற்றிய வரலாறு:

முதல் முதலில் 14 ஆம் நூற்றாண்டு தான் clock  என்ற வார்த்தை அறிமுகமானது. இவை clocco என்ற இலத்தின் மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சொல் ஆகும்.

பழங்காலத்தில் சூரியன் விழும் இயக்கத்தையும்,அதனுடைய விளைவாக வர கூடிய நகர்வுகளை வைத்துதான் நேரங்களை கணக்கீடு  இருந்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நம்பளுடைய நிழல் முன்னாடி விழுந்தால்  அது காலையில் இருந்து மதியம் வரையும் உள்ள நேரமாகவும் இருந்திருக்கிறது. நிழல் வரவே இல்லை என்றால் 12 லிருந்து 1 மணி  என்று அர்த்தம். நிழல் நமக்கு பின்னால் வந்தால் 2 மணிக்கு மேல் என்று கணக்கிட்டு இருந்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் உருவான கைக்கடிகாரகலானது நேரத்தை மட்டும் தெரிந்து கொள்வதுடன் நம் உடல் ஆரோக்கியத்தை பற்றியும் தெரிந்துகொள்வது போல உருவாக்கப்பட்டிருக்கிறது, அதாவது நம் உடலில் உள்ள வெப்பம், நம் உடலில் எவ்வளவு கலோரிகள் எரித்திருக்கிறோம், எத்தனை தூரங்கள் நடந்திருக்கோம் என்று காட்டப்படும் கைக்கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடிகாரத்தை கண்டுபிடித்தவர் யார்:

கடிக்கரத்தை  முதல் முதலில் கி.பி  1500 பத்தாம் ஆண்டுயில் ஜெர்மனை சேர்ந்த ஒரு பூட்டு தயாரிக்கும் தொழிலாளியான பீட்டர் ஹென்லின் என்பவர் நேரத்தை காட்டும்  நிலையான கடிகாரத்தை உருவாக்கி இருந்திருக்கிறார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல்  அசைவில் இயங்கும் கடிகாரத்தை உருவாக்கி ஒரு நாளை 24 மணி நேரம் என்றும் ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிசத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்திருக்கிறார்.

நாம் உபயோக்கிக்க கூடிய கை கடிகாரத்தை கண்டுபிடித்தவர் லூயி ப்ரெக்ட் என்பவர் ஆவர்,இவர் 1710 யில் கார்லின் முரட் என்ற ராணிக்காக இவர் தயாரித்த முதல் கை கடிகாரமாகும்.

அதன் பிறகு 1927– ஆம் ஆண்டு கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் உருவாக்கப்பட்டது.

1840 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பெயின் என்பவர் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு பல அறிவியல் அறிஞர்களால் இது போன்ற கடிகாரங்கள் உருவாக்கப்பட்டது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil