கணக்கு விடுகதைகள் | Puthir Kanakku

kanakku pudhirgal

கணக்கு புதிர் கேள்வி பதில்கள் | Maths Vidukathai in Tamil

பள்ளி படிக்கும் மாணவர்களில் இருந்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பாடம் பிரச்சனை ஆக இருக்கும் என்றால் அது கணக்கு பாடம் தான். கணக்கை எளிதாக புரிந்து கொள்பவர்களும் இருப்பார்கள். ஒரு சிலருக்கு எவ்வளவு தான் கணக்கை போட்டு பார்த்தாலும் மண்டையில் ஏறாது. அப்படி கணக்கு புரியாதவர்கள் எளிதாக அதை புரிந்துகொள்ள தங்களுக்கு எது பிடிக்குமோ அதனுடன் ஒப்பிட்டு படித்தால் சுலபமாக அதற்கான விடையை போட்டு விடலாம். உதராணத்திற்கு சிலருக்கு விடுகதை பிடிக்கும் என்றால் அதனுடன் ஒப்பிட்டு படிக்கலாம். அந்த வகையில் இந்த பதிவில் ஒரு சில கணக்குகளை விடுகதை வடிவில் கேட்டு அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கு பாடம் புரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிர் கணக்கு வினா விடை – Maths Riddles With Answers in Tamil

  1. பாலாஜி விமலின் மகன், அருண் கமலாவின் மகன். பாலாஜி கீதாவை கல்யாணம் கொள்கிறான். கீதா கமலாவின் மகள் அப்படியென்றால் அருண் பாலாஜிக்கு என்ன உறவு?

விடை: மைத்துனர்.

2. 7 ஒன்றுகளை கொண்டு 25 -ஐ பெறுவது எப்படி?

விடை: 11 + 11 + 1 + 1 + 1 = 25

கணக்கு புதிர் விளையாட்டு:

3. எட்டு, எட்டுகளை கொண்டு 1000-தை பெறுவது எப்படி?

விடை: 888 + 88 + 8 + 8 + 8 = 1000

4. 8 லிட்டர் அளவுடைய பாத்திரமும் மற்றும் 5 லிட்டர் அளவுடைய பாத்திரமும் உள்ளது என வைத்துக்கொள்ளலாம். அந்த இரண்டு பாத்திரத்தையும் வைத்து 2 லிட்டர் தண்ணீரை எவ்வாறு பிரிக்க முடியும்?

விடை: 5 லிட்டர் பாத்திரத்தில் உள்ள நீரை 8 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பின் மறுபடியும் 5 லிட்டர் பாத்திரத்தில் நீரை எடுத்து கொண்டு அதில் 3 லிட்டர் நீரை மட்டும் 8 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் இப்பொழுது 8 லிட்டர் பாத்திரம் முழுமையாக நிரம்பி விடும். 5 லிட்டர் பாத்திரத்தில் 2 லிட்டர் நீர் மீதம் இருக்கும்.

அறிவியல் விடுகதைகள்

கணக்கு புதிர் கேள்வி பதில்கள் – புதிர் கணக்கு வினா விடை:

5. மூன்று மூன்றுகளை கொண்டு 27-ஐ பெறுவது எப்படி?

விடை: 3 * 3 * 3 = 27

6. ஐந்து 9களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், ஆனால் விடை 10 என வர வேண்டும் அது எப்படி?

விடை: 99-ஐ 99-ஆல் வகுத்து 9-ல் கூட்டி வர விடை 10 வரும்.

9+99/99=10

  • 99-ஐ 9-ஆல் வகுத்து கொள்ள வேண்டும் மற்றும் 9-ஐ 9-ஆல் வகுத்து கொள்ள வேண்டும்

99/9=11.

9/9=1

  • வகுத்து வரும் இரண்டு விடையையும் இப்பொழுது கழித்தால் விடை 10 வரும்.

11-1=10

கணக்கு விடுகதைகள் – கணக்கு விளையாட்டு:

7. ஒருவர் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தார் அவர் செல்லும் போது அவரின் வலது பக்கம் சூரியன் மறைந்தது அப்போது அவர் சென்ற திசை என்ன?

விடை: தெற்கு திசை.

8. சதீஸ் விமலின் மகன். விக்னேஷ் கமலாவின் மகன். சதிஷ் கீதாவை கல்யாணம் செய்து கொள்கிறான். கீதா கமலாவின் மகள். அப்படியென்றால் விக்னேஷ் சதீஸுக்கு என்ன உறவு.

அ) அண்ணன்

ஆ) சித்தப்பா

இ) மாமனார்

ஈ) மைத்துனர்

விடை: மைத்துனர்

Puthir Kanakku Maths in Tamil – கணக்கு விடுகதைகள்:

9. ரவி மற்றும் குமார் ஹாக்கி, கைப்பந்து விளையாட்டில் சிறந்தவர்கள். சச்சின் மற்றும் ரவி ஹாக்கி, கபடி விளையாட்டில் சிறந்தவர்கள். விஜய் மற்றும் குமார் கிரிக்கெட், கைப்பந்தில் விளையாட்டில் சிறந்தவர்கள்.சச்சின், விஜய், மகேஷ் கால்பந்து, கபடி விளையாட்டில் சிறந்தவர்கள். எனில் ஹாக்கி, கிரிக்கெட், கைப்பந்தில் சிறந்தவர்கள் யார் ?

விடை: குமார் 

10. ஒரு பெரிய குடும்பத்தில் நிறைய சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதே எண்ணிக்கையில் சகோதரிகளும் உள்ளனர். ஆனால் ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரிகள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில் தான் சகோதரிகள் உள்ளனர். அப்படியென்றால் அவர்களில் சகோதரிகள்? சகோதரர்கள் எத்தனை பேர்?

விடை: மொத்தம் 7 பேர்கள். அதில் 4 சகோதரர்கள், 3 சகோதரிகள்.

கணக்கு புதிர் கேள்வி பதில்கள்:

11. டேவிட் ஒரு சந்தைக்கு சென்றான். அங்கே ஒரு பசுவை 10 டாலருக்கும், ஒரு பன்றியை 1 டாலருக்கும், 8 கோழிகளை 1 டாலருக்கும் வாங்கினான். அவன் பசு, பன்றி, கோழி என அனைத்தையும் கலந்து 100 வாங்கினான், அவனிடம் 100 டாலர் மட்டுமே இருந்தது. டேவிட் 100 டாலருக்குள் 100 விலங்குகளை எந்த விகிதத்தில் வாங்கியிருப்பான்.

விடை:

7 பசு: 7*10= 70 டாலர்

21 பன்றி: 21*1= 21 டாலர்

72 கோழி: 9 டாலர் மொத்தம் 100 விலங்கு மற்றும் 100 டாலர்

12. ராமு மற்றும் கோபுவிடம் சில சாக்லேட்டுகள் உள்ளன. ராமுவிடம் இருந்து 7 சாக்லேட்டுகளை கோபுவிடம் கொடுத்தால் ராமுவிடம் இருப்பதை போல இரு மடங்கு ஆகிவிடுகிறது. அது போல கோபுவிடமிருக்கும் 7 சாக்லேட்டுகளை ராமுவிடம் கொடுத்தால் இருவரிடமும் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை சரி சமமாகி விடுகிறது. அப்படியானால் இருவரிடமும் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:

  • ராமு மற்றும் கோபுவிடம் இருந்த சாக்லேட்டுகள் 35 (ராமு) மற்றும் 49 (கோபு). ராமுவிடம் இருந்து 7 சாக்லேட்டுகளை கோபுவிடம் கொடுத்தால் 35-7 = 28 ஆகிவிடும்.
  • கோபுவிடம் இப்போது 49 + 7 = 56 சாக்லேட்டுகள் உள்ளது. இப்போது இது இருமடங்காக உள்ளது 2* 28 = 56
  • கோபு 7 சாக்லேட்டுகளை ராமுவிடம் கொடுத்தால் 49 – 7 = 42 கோபுவிடமும், ராமுவிடம் 35 + 7 = 42. இப்போது ராமு மற்றும் கோபுவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கை சரி சமமாகி விடும்.

13. ஒரு வரிக்குதிரை தண்ணீர் குடிக்க சென்றது. அங்கே 5 யானைகளும், 5 குரங்குகளும் இருந்தன. அப்படியானால் மொத்தம் எத்தனை மிருகம் ஆற்றுக்கு சென்றன.

விடை: வரிக்குதிரை மட்டும் தான் ஆற்றுக்கு சென்றது. மற்ற மிருங்கங்கள் அங்கே தான் இருந்தன.

கணக்கு விடுகதைகள் – புதிர் கணக்குகள் விடைகள்:

14. ஒரு தந்தை தனது மகனிடம் நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நீ சரியான பதிலை கூறினால் நான் உனக்கு 5 ரூபாய் தருவேன், தவறான பதிலை கூறினால் நீ எனக்கு 8 ரூபாய் தர வேண்டும் என்றார். அவர் மொத்தம் 26 கேள்விகள் அவனிடம் கேட்டார். 26 கேள்விகள் முடிவில் இருவரும் எந்த பணமும் கொடுக்கவுமில்லை, வாங்கவுமில்லை அது எப்படி?

விடை: அவரின் மகன் 16 கேள்விகளுக்கு சரியான பதிலையும், 10 கேள்விகளுக்கு தவறான பதிலையும் கூறினான். அவன் தவறாக சொன்ன கேள்விக்கு 8 ரூபாய் வீதம் ரூபாய் கொடுக்க வேண்டும். அவன் சரியாக சொன்ன 16 பதிலுக்கு 5 ரூபாய் வீதம் 80 ரூபாய் தந்தை மகனுக்கு கொடுக்க வேண்டும். இரண்டு பேரும் கொடுக்க வேண்டிய பணம் 80 ரூபாய் அதனால் இருவரும் எந்த பணமும் கொடுக்கவுமில்லை, வாங்கவுமில்லை.

15. Pot 00000000 இது எதை குறிக்கிறது?

விடை: Potatoes (Pot + 8 O’S)

தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil