கணினியின் வகைகள் தமிழ் | Types of Computer Names in Tamil
நம் அன்றாட தேவைகளில் மிகவும் முக்கியமான பொருள் என்றால் அது கணினி தான். கணினியின் சேவை இந்த உலகத்தில் அளப்பரியது. அலுவலகம், கல்லூரி, பள்ளி என அனைத்து இடங்களிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி பயன்படுத்தப்படும் கணினிகளில் Processors, வேகம், அளவு ஆகியவற்றை பொறுத்து வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நாம் இந்த தொகுப்பில் கணினிகளின் வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
கணினி வகைகள்:
- திரைப்பலகக் கணினி (desktop computers)
- மடிக்கணினி (laptops)
- கையடக்க கணினி (handheld computers)
- Server (சர்வர்)
- Mainframe (மெயின் பிரேம்)
- Super computer (சூப்பர் கம்யூட்டர்)
திரைப்பலகக் கணினி (Desktop Computers):
Types of Computer in Tamil: மேஜை மேல் வைத்து பயன்படுத்தப்படும் கணினியாகும். இது சற்று அளவில் பெரியதாக இருக்கும். Display, CPU, Keyboard, Mouse போன்றவை இருக்கும்.
மடிக்கணினி (Laptops):
கணினி வகைகள்: இந்த வகை கணினியை நாம் கைகளில் அல்லது பைகளில் வைத்து எடுத்து செல்ல முடியும். இதனுடைய திரை மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கும். CPU, திரை (screen), விசைப்பலகை (keyboard) ஆகியவை ஒரே பெட்டியில் அமைந்திருக்கும். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கையடக்க கணினி (Tablet):
Types of Computer in Tamil: தொலைபேசியை போல வடிவமைப்பை கொண்டது இந்த கணினி. பெரும்பாலும் இதை இயக்குவதற்கு டாப்ளெட் பேனா (tablet pen) பயன்படுத்தப்பட்டு வந்தது, இப்போது touch வசதியும் வந்துவிட்டது. Virtual Keyboard, Wi-Fi (Wireless Technology) போன்ற அமைப்புகளும் உள்ளது.
சர்வர் (Server):
கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சர்வர். இதனுடைய பயன்பாடு Network-ல் இணைந்து இருக்கும் மற்ற கணினியோடு சேர்ந்து இயங்கும் வண்ணம் இருக்கும். சர்வரை உபயோகப்படுத்தும் விதத்தை பொறுத்து கீழ்கண்டவாறு பிரிக்கலாம்,
- தகவல் சேமிப்பு (File server)
- விளையாட்டு சம்பந்தப்பட்ட தகவல் (Gaming Server)
- மின்னஞ்சல் தகவல் (Mail Server).
மெயின் பிரேம் (Mainframe):
- Types of Computer in Tamil: அதிக அளவில் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. வங்கிகளில் பணத்தை பரிமாற்றுவதற்கு இந்த வகை கணினி தான் பயன்படுகிறது.
Super computer:
- அதிக செயல்திறனை கொண்ட கணினி இது. மிகவும் கடினமான வேலைகளை எளிமையாகவும், விரைவாகும் முடிக்கும் தன்மை கொண்டது. தொழில்நுட்பம், சுற்றுசூழல் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், வானிலையில் இந்த வகை கணினிகள் உபயோகப்படுத்தபடுகின்றன.
கணினி வகைகள்:
தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினிகள் இரண்டு வகையாக உள்ளது அவை:
- Analog Computer
- Hybrid Computer
Analog Computer:
இந்த கணினிகள் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தபடுகிறது. எரிவாயு நிலையங்களில் எரிவாயுவின் அளவை கணக்கிட பயன்படுகிறது. வோல்டேஜ் அழுத்தம், வேகம் வெப்பத்தை கணக்கிட முடியாது.
Hybrid Computer:
ஆராய்ச்சி கூடங்களில் இந்த வகை கணினிகள் பயன்படுத்தபட்டு வருகிறது.
கணினி கலைச்சொற்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |