கண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

How Tears Come From Eyes in Tamil

கண்களில் கண்ணீர் வர காரணம் – How Tears Come From Eyes in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நாம் எமோஷனல் ஆனாலோ.. மகிழ்ச்சியாக சிரித்தலோ அல்லது கொட்டாவி விட்டாலோ நமது கண்களில் இருந்து கண்ணீர் வரும் அல்லவா. இந்த கண்ணீர் எப்படி நமது கண்களில் இருந்து வருகிறது என்று ஒரு நாளாவது நீங்கள் யோசிச்சிருக்கின்றாளா. அப்படி இல்லையென்றால் உங்களுக்கான பதிவு தான் இந்த பதவி. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் நமது கண்களில் இருந்து கண்ணீர் எப்படி வருகிறது என்பதை பற்றி தான் படித்து தெரிந்து கொள்ள போகிறோம். ஆகவே இந்த பதவி முழுமையாக படியுங்கள்..

கண்களில் இருந்து எப்படி கண்ணீர் வருகிறது?

கண்கள் சிரமமில்லாமல் நகர்வதற்கு கண்களில் ஈரப்பதம் தேவை. கண்களின் மேல், கீழ் இமைகளை கன்ஜங்டிவா எனும் மெல்லிய இழை இணைக்கிறது. 2-10 நொடிகளுக்கு ஒருமுறை கண்களை இமைப்பதன் மூலம் கண்களில் உருவாகும் ஈரப்பதம் வற்றாமலிருக்கிறது.

கண்ணீர் கண்களுக்கு ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் கண்களுக்கு வழங்குகிறது. பாக்டீரியா மற்றும் பல்வேறு தூசு தும்புகளை வெளியேற்ற கண்ணீர் மட்டுமே ஒரே வழி. கண்ணீர் வெளிவராதபோது கண்ணின் உள் அடுக்குகளில் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆண்களை விட பெண்கள் அழக்காரணம், அவர்களின் உடலிலுள்ள 60 சதவிகித புரோலேக்டின் வேதிப்பொருளே காரணம். நாளமில்லா சுரப்பிகளை இவைகளே தூண்டி பெண்கள் சிறுசிறு துளிகளாக கண்ணீரை சிந்த வைக்கின்றன.

அதிர்ச்சி, ஆனந்தம், கோபம், துக்கம் மட்டுமல்ல சிரிப்புக்கும் வரும். வயிற்றிலுள்ள தசைகள், முகதசைகள் இணைந்து நாளமில்லா அமைப்பை தூண்டுவதால் தொடர்ந்து சிரிக்கும்போது கண்ணீர் வருகிறது.

அழுவது கண்களிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும், நம் மனநிலையை மாற்றவும் உதவுகிறது. அழும்போது உடலில் ஆக்சிடோசின், எண்டோர்பின் வேதிப்பொருட்கள் வெளிவருவதால் நாம் மனம் மற்றும் உடல் வலியிலிருந்து எளிதாக வெளிவர முடிகிறது.

கண்ணீர் எப்படி சுரக்கிறது?

நம் கண்களில் இரு கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவை புருவமுடி இடத்திற்கு மேல்பகுதியில் உள்ளது. நாம் நமது கண்களை இமைக்கும் போது சுரக்கப்படும் கண்ணீர் கண்களில் பரவி கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பிறகு இமைகளின் விளிம்பில் உள்ள ஒரு சிறு திறப்பு வழியாக கண்ணீர் பையை அடைந்து அங்கிருந்து மூக்கிற்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிறது. இது எப்போதும் நடக்கும் நிகழ்வு.

lacrimal

ஆனால் நம் உணர்வுகளின் காரணமாக நாம் அழும்போது காணீர் அதிகமாக சுரக்கும். எனவே தான் அதனை வெளியேற்ற முடியாத அதிகப்படியான நீர் நம் கன்னங்கள் வழியாக வெளியேறுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil