கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

karungali tree

கருங்காலி மரம் பயன்கள்:

இயற்கை வளத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று தான் மரம். மரங்களில் நிறைய வகைகள் உள்ளன. அரச மரம், ஆலமரம், வேப்பமரம், புளியமரம், தென்னை மரம், மாமரம், பூவரசமரம், அத்தி மரம், தேக்கு மரம், சந்தன மரம் என்றார் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கருங்காலி மரம். இந்த கருங்காலி மரம் பற்றி அவ்வளவு பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமது முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்திய மரங்களில் ஒன்று தான் இந்த கருங்காலி மரம். சரி இந்த பதிவில் கருங்காலி மரம் சிறப்பு மற்றும் பயன்களை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கருங்காலி மரம் சிறப்பு:

அபூர்வமான மரங்களில் ஒன்று தான் இந்த கருங்காலி மரம். ஏன் இந்த மரத்தை அபூர்வமான மரம் என்று சொல்ராங்க அப்படினா.. இந்த மரத்தின் ஆற்றலானது சுற்றி ஒரு கிலோ மீட்டர்  தூரத்திற்கு இருக்குமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த மரம் இது.

மின் காந்த ஆற்றலை சேமிக்கும் ஆற்றல் இந்த மரத்திற்கு அதிகம் இருக்கிறதாம். இதன் காரணமாக தான் இந்து மதங்களில் கோவில் கொடை முழுக்கில் இந்த மரத்தின் குச்சிகளை போடுகின்றார்களாம்.

மேலும் இந்த கருங்காலி மரத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை அளிக்கும் சக்தி இருக்கிறதாம். இதன் காரணமாக தான் அந்த காலத்தில் இந்த மரத்தில் செய்யப்பட்ட சிற்பங்கள் வீட்டில் வைத்திருந்தாராம். குறிப்பாக அந்த காலத்தில் பெரிய பெரிய பணக்காரர்கள் ஏக்கம் இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வாக்கிங் ஸ்டிக்கினை பயன்படுத்தி உள்ளனர்.

சிலர் கெட்ட ஆத்மாக்கள் இருக்கிறது என்று நம்புகின்றன. அப்படிப்பட்டகியவர்கள் அந்த கெட்ட ஆத்மாக்களை விரட்ட இந்த மருங்காலி மரத்தை பயன்படுத்துவர்களாம்.

அந்த காலத்துல நமது முன்னோர்கள் இந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையை பயன்படுத்தி தான் நெல் குத்தி அவற்றில் இருந்து கிடைக்கும் அரிசியை சமைப்பதற்கு பயன்படுத்துவார்களாம். இதற்கு என்ன காரணம் அப்படினா இந்த மரத்தில் உள்ள வீரிய குணம் மற்றும் மூலிகை தன்மை அந்த அரிசியுடன் சேரும். அவற்றை நாம் சமைத்து சாப்பிடும் போது நமது உடலில் எந்த வியாதிகளும் வராதாம்.

உங்களுக்கு மரப்பாச்சி பொம்மை அப்படினு ஒன்று இருந்திச்சின்னு தெரியுமா? அப்படி தெரியும் என்றால் அந்த மரப்பாச்சி பொம்மைகள் கூட இந்த கருங்காலி மரத்தில் தான் செய்வாங்களாம்.

இந்த கருங்காலி மரம் செவ்வாய் கிரகத்தில் உள்ள நற்குணங்களை பெற்றது என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக இந்த மரத்தின் நிழலடியில் அமர்ந்திருப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு நற்குணங்களை பெற்றதுதான் இந்த கருங்காலி மரம். பெருபாலும் இவை காடுகளில் தான் வளர்ப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் சிறப்பை மக்கள் அறிந்த பின்பு தான் இப்பொழுது வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

கருங்காலி மரப்பாச்சி பொம்மை:

கருங்காலி மரப்பாச்சி பொம்மை

 Karungali Tree:

கருங்காலி மரம்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com