கருங்காலி மாலை – Karungali Malai Uses in Tamil
தற்பொழுது கருங்காலி மாலையை பற்றி யாரும் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டிர்கள், இந்த மாலையை போட்டால் காசு வரும், நினைத்தது நடக்கும், நடிகர்கள் கூட போட்டுருக்காங்க என்று சொல்ராங்க ஆனா இந்த கருங்காலி மாலையின் உண்மையான விஷயம் என்னவென்றால் இந்த மாலையை விற்பனை செய்பவர்களுக்கு தான் காசு மாலை பொழியுதுனு சொல்லலாம். ஐயையோ அப்போ நா கருங்காலி மாலையை வாங்கிட்டேன் இதுல ஒரு பலனும் இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக அதற்கு பலன்களும் இருக்கிறது அதுகுறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். கருங்காலி மாலை யார் போடலாம், யார் போட கூடாது, கருங்காலி மாலை ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது, போன்ற கருங்காலி மாலையை பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
கருங்காலி மாலை அணியலாமா?
பொதுவாக இந்த கருங்காலி மாலையை இவர்கள் அணியலாம், இவர்கள் அணியக்கூடாது, இந்த ராசிக்காரர்கள் அணியலாம் இந்த ராசிக்காரர்கள் அணிய கூடாது என்று எந்த ஒரு விதி முறைகளும் இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆண் பெண் இருவருமே எல்லா நேரங்களிலும் அணிந்துகொள்ளலாம்.
கருங்காலி மாலை அணிந்துகொள்ளும் முறை:
இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அணியலாம் உதாரணத்திற்கு கையிலோ, கழுத்தை ஒட்டியோ, அல்லது கழுத்தில் நீளமாகவோ அணிந்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
கருங்காலி மாலை பற்றிய உண்மை:
இந்த கருங்காலி மாலையை அணிந்துகொள்வதினால் என்ன நன்மை ஏற்படும் என்றால் மற்றவர்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.
கெட்ட சக்திகள் உலவிக்கொண்டு இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால், அதனை நினைத்துக்கொண்டு ஏதாவது பயத்தோடு இருந்தால் இந்த கருங்காலி மாலையை அணிந்துகொள்ளலாம் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
கருங்காலி வறட்சியை தாங்கி வளரக்கூடிய ஒரு தாவரம், பல வருடமாக இருக்கக்கூடிய ஒரு கருங்காலி மரத்தோட நாடு பகுதி ரொம்ப கடினமாக மிகவும் சக்தி வந்ததாக இருக்கும்.
இந்த தண்டு பகுதியை வெட்டி சாமி சிலைகள் மற்றும் விட்டு உபகரண பொருட்கள் எல்லாம் செல்வார்கள், பழங்காலத்தில் அனைவரது வீட்டிலும் இந்த மரத்தால் செய்யப்பட்ட ஒலக்கையை தான் பயன்படுத்து வந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பல் வளரும் பருவத்தில் இந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளை தான் வாங்கி கொடுப்பாங்க, குழந்தைகள் இந்தனை கடித்து விளையாண்டாள் கூட எந்த ஒரு பிரச்சனையும் வராது.
இந்த மரத்தின் நிழலில் அடிக்கடி அமர்த்திருக்கலாம் என்றும் சொல்வார்கள்.
இந்த மரத்தில் தான் ஆதிகாலத்தில் கடல்கடந்து போவதற்கு படகுகளுக்கு பாய்மரம் காட்டுவார்களாம், ஏன் என்றால் இடி மின்னல் செங்குத்தாக இந்த மரத்தில் இரங்கி கடலுக்கு போய்விடும் என்பதற்காக.
கோயில் குடமுழுகின் போது கலசத்தை நிலைநிறுத்துவதற்கு இந்த கருங்காலி கட்டையை தான் பயன்படுத்துவாங்க. அது பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ஆற்றல்களை ஈர்த்து கருவறையில் விக்ரகத்தோட அடியில் சில தகடுகள் எல்லாம் பதிக்கப்பட்டு இருக்கும், அந்த சக்தியோட கலந்து நமக்கு அபரீதமான சக்தியை கொடுக்கும். இதனை நாம் நமது பலன்களை கோயிகளில் உணரலாம்.
கருங்காலி மாலை பயன்கள்:
இந்த கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் இவைகள் எல்லா மருத்துவ துறையிலும் பயன்படுத்துவாங்க.
இந்த மரத்தில் துவர்ப்பு சுவை அதிகமாக இருப்பதினால் வயிற்று பிரச்சனை, ஜீரண கோளாறு, நீரிழிவு நோய், இரத்த குறைபாடு பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.
கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரில் குளித்தால் உடல் சோர்வு, வலி இவை எல்லாம் போயிடும், மேலும் இந்த கட்டையை ஊறவைத்து கஷாயமாக தினமும் இரண்டு வேளை கொஞ்சமாக பருகி வந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் எல்லாம் நீங்கிவிடும். சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
கருங்காலியோடு பிசினை பொடி செய்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் வலிமை பெரும், பித்தம் குறையும், நரம்பு தளர்ச்சி நீங்கும், இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிக்கும், பெண்களின் கர்ப்பப்பையும் வலு பெரும், அதிக இரத்த போக்கு உள்ள பெண்களுக்கு நல்ல பலன்களை தரும், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் இருக்கும் மலட்டு தன்மை நீங்கும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுத்தல் பிரச்னையும் சரியாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!
கருங்காலி மாலை ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது?
கருங்காலி மாலையை வாங்கி வந்து அதனை தண்ணீரில் போட்டு வைக்கவும். அது சாயம் போனாலோ, தண்ணீர் கருப்பு நிறமாக மாறினாலோ அல்லது தண்ணீர் நிறம் மரமாக இருந்தாலோ அது போலியான கருங்காலி மாலை ஆகும்.
உண்மையான கருங்காலி மாலை என்றால் நீங்கள் தண்ணீரில் போட்ட கொஞ்சம் நேரத்தில் அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் இருக்கும் சாறு அந்த தண்ணீரில் எண்ணெய் படலமாக படிந்திருக்கும் அது தான் உண்மையான கருங்காலி மரம் ஆகும்.
அல்லது கருங்காலி மாலையில் இருக்கும் ஒரு மணியை உடைத்து பாருங்கள் அது கருப்பு நிறமாகவோ அல்லது காபி பிரவுன் நிறமாக இருந்து பார்ப்பதற்கு மரம் போல் இருந்தால் அது உண்மையான கருங்காலி மாலை ஆகும்.
| மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |














