கருணை வேறு சொல் | Karunai Veru Sol in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் கருணை என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருணை என்றால் என்ன..?
கருணை என்ற சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் அது பயன்படுத்தப்படும் சூழலைப் பொறுத்தது. பொதுவாக அனைத்து உயிர்கள் மீதும் எதிர்பார்ப்பில்லாத அன்பே கருணை எனக் கூறலாம்.
இது இரக்கத்தின் செயலாக பார்க்கப்படுகின்றது. மேலும் கருணை என்பது ஒரு ஆளுமைப் பண்பாக மற்ற உயிரினங்களுடன் எதையாவது பகிர்ந்து கொள்ளும் திறன், நன்றியுணர்வு போன்றவற்றால் அறியப்படுகின்றது.
கருணை என்பது நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு மட்டுமல்லாது நல்ல செயல்களைச் செய்ய வல்ல சக்தியெனலாம். மேலும் துக்கமான நேரத்தைக் கடந்து செல்லும் ஒரு நபருக்கு ஒருவர் காட்டும் ஒரு கனிவான அணுகுமுறை எனலாம்.
கருணை வேறு சொல்:
கருணை என்ற சொல்லுக்கான வேறு சொற்கள்,
- அருள்
- இரக்கம்
- கிருபை
- தயவு
- பரிவு
- அன்பு
- ஈவு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |