Kalal Vari Endral Enna
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக கலால் வரி என்றால் என்ன.?என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. வரி என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்றாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு நபருடைய வருமானத்தின் அடிப்படையில் வரி என்பது செலுத்தப்பட வேண்டும். இந்த வரிகளில் பல வகைகள் உண்டு. அப்படி வரிகளில் ஒன்றாக இருக்கும், கலால் வரி பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவில் உள்ள வரிகளில் சொத்து வரி, வருமான வரி, சுங்கச்சாவடி வரி, கலால் வரி, விற்பனை வரி மற்றும் சுங்க வரி என பல வகையான வரிகள் அடங்கும். இந்த ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விதிமுறையின் கீழ் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கலால் வரி என்றால் என்ன.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
GST மற்றும் VAT வரிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தெரியுமா உங்களுக்கு ?
கலால் வரி என்றால் என்ன.?
கலால் வரி என்பது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மறைமுக வரியாகும். அதாவது, நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி தான் கலால் வரி. இதனை ஆங்கிலத்தில் Central Excise Duty (எக்சைஸ் ட்யூட்டி) என்று கூறுவார்கள்.
1944 மத்திய கலால் சட்டம் மற்றும் 1985 மத்திய கலால் கட்டணச் சட்டத்தின் கீழ் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.
கலால் வரி வகைகள்:
இந்தியாவில் மூன்று வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்படுகிறது. அவை பின்வருமாறு:
- அடிப்படை கலால் வரி
- கூடுதல் கலால் வரி
- சிறப்பு கலால் வரி
கலால் வரி எதற்கு விதிக்கப்படுகிறது.?
சரக்கு வரி மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுத்தியப் பின்னர், தற்போது மத்திய கலால் வரியானது பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம், புகையிலை, ஆரோக்கியமற்ற பொருட்கள், சூதாட்டம், போதைப்பொருள், கஞ்சா போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலையில் இருந்து வேயேற்றப்படும்போது பொருளின் தயாரிப்பாளரால் கலால் வரி செலுத்தப்படும்.
விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்களை தவிர மற்ற அணைத்து பொருட்களுக்கும் கலால் வரி விதிக்கப்படுகிறது.
கலால் வரி, என்பது பொதுவாக ஒரு யூனிட் வரியாகும் , இது வாங்கிய பொருளின் அளவு அல்லது யூனிட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவழிக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — | Today Useful Information In Tamil |