கல்வி பற்றிய பழமொழிகள் | Kalvi Patriya Pazhamozhigal in Tamil

Advertisement

Kalvi Patria Palamoligal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! கல்வி என்பது ஒரு மனிதனை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற” என்கிறார் பொய்யாமொழி புலவர். அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். கல்வியின் சிறப்பை தெளிவாக எடுத்து காட்டுகின்றது. கல்வியை பற்றி செல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் சரி இந்த பதிவில் கல்வி பற்றிய பழமொழிகள் சிலவற்றை அறியலாம்.

தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்

கல்வி பற்றிய பழமொழிகள் பத்து அல்ல இருப்பது ஒன்று பழமொழிகள் – Proverbs About Education In Tamil

1. கற்பதற்கு வயது இல்லை.

2. கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.

3. தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.

4. கற்காதவன் அறியாதவன்.

5. கல்வியால் பரவும் நாகரிகம்.

6. கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.

7. கல்வியே நாட்டின் முதன் அரண்.

8. ஐயமே அறிவின் திறவுகோல்.

9. அறிவே ஆற்றல்.

10. அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.

11. அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.

12. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

13. நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.

14. அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.

15. மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை.

16. அறிவு ஒரு சுமை அன்று.

17. அறிவு தன் விலை அறியும்.

18. அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது.. ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது.

19. ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம்.

20. அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.

21. கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்.

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement