வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிருபை என்றால் என்ன..அதன் அர்த்தம்

Updated On: December 21, 2024 12:37 PM
Follow Us:
kirubai endral enna
---Advertisement---
Advertisement

கிருபை என்றால் என்ன

கிருபை என்ற வார்த்தை கிறிஸ்துவர்கள் கூறி கேட்டிருப்போம். இவர்கள் எப்படி கூறுவார்கள் என்றால் ஏதாவது ஒரு விஷயம் செய்கிறார்கள் என்றால் ஆண்டவனின் கிருபையால் இந்த செயலை செய்து முடித்தேன் என்று கூறுவார்கள். ஆக இதிலிரிருந்து நாம் இதுவரை புரிந்து வைத்திருப்பது கிருபை என்றால் அருள் என்று புரிந்து வைத்திருப்போம். அதனால் இந்த பதிவில் கிருபை என்றால் என்ன என்பதை வாங்க.

கிருபை அர்த்தம்:

கிருபை என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுவோம், கிறிஸ்தவ வரையறையில், பொதுவாக கிருபை என்பது “தகுதியற்றவர்கள் மீது தேவன் காட்டும் தயவு” அல்லது “தகுதியற்றவர்கள் மீது அவர் காட்டும் கருணை” என்று கூறலாம்.

கிருபை என்றால் என்ன.?

கிறிஸ்துவர்கள் அதிகமாக பேசுகின்ற வார்த்தையாக கிருபை உள்ளது. அதாவது கிருபை என்பது விடுதலையை குறிக்கிறது. தகுதியில்லாத ஒருவனுக்கு தகுதியான ஒன்றை கொடுப்பது தான் கிருபை என்று கூறுகிறார்கள். இதனால் பல விதமாக கூறுகின்றனர். ஆற்றல், திறமை, வல்லமை போன்றவற்றால் கூறலாம்.

எடுத்துக்காட்டு: 

ஒருவர் நன்றாக படிப்பவராக இருக்கலாம், சில பேர் அழகாக பாட கூடியவர்களாக இருப்பார்கள். சில பேர் எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக செய்து முடிப்பவராக இருப்பார்கள். இவர்களை பார்த்து நாம் கிருபை பெற்றவர்கள் என்று கூறலாம்.

தேர்வு எழுதுகின்ற மாணவன் தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்தால் தான் அவன் தேர்ச்சி பெற்றவன் ஆகிறான். ஆனால் இவன் 30 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு எழுதியுள்ளான். இந்த பேப்பரை திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்கள் காரணமாக ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று நினைத்து கூடுதலாக 5 மதிப்பெண் சேர்த்து அவனை தேர்ச்சி பெற வைக்கிறார். இந்த தேர்ச்சிக்கு அவன் தகுதியில்லாதவன், ஆனால் ஆசிரியர் தயவினால் அவன் தகுதியானவராகிறான். இதை தான்  தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை என்று கூறுகிறார்கள்.

Kirubai in English:

கிருபை என்பதனை ஆங்கிலத்தில் Grace மற்றும் Mercy என்று கூறலாம்.

கிருபையின் உருவம்:

இயேசுவை கிருபையின் உருவமாக கருதப்படுகிறார். இவர் சத்தியத்தாலும், கிருபையினாலும் நிறைந்தவராக கருதப்படுகிறார். இதனை வேறு விதங்களில் கூறினால் கிருபையின் உருவமாக இயேசு திகழ்கிறார்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now