கெட்ட குணம் கொண்டவர்கள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் யாருக்கு கெட்ட குணம் இருக்கும் என்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நம்மோடு பழகுபவர்கள் அனைவரும் நல்லவர்களும் கிடையாது. அனைவருக்கும் கெட்டவர்களும் கிடையாது அதனால் யார் எப்படி பட்டவர்கள் என்று அவர்களிடம் பழகிப்பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளலாம் எனவே அவர்களிடம் பழகி கெட்ட பெயர்களை நாம் வாங்கிக்கொள்வதற்கு அவர்கள் எப்படிப்பட்டவர் என்று அவர்கள் பழகும் விதத்தில் தெரித்துக்கொள்ளாம். இப்படி எல்லாம் அவர்களிடம் குணம் இருந்தால் அவர்களிடமிருந்து கொஞ்சம் ஒதுங்கிக்கொள்வது நல்லது.
கெட்ட குணம் கொண்டவர்கள்:
- இப்போது ஒரு விஷயத்தில் அதிக முரண்பாடுகள் கொண்ட குணம் கெட்ட குணம் ஆகும். அதாவது ஒரு இடத்தில் அனைவர்க்கும் பிடித்த ஒரு விதத்தில் ஒரு கேள்விக்கான பதில் அல்லது ஒரு விஷயம் என்றும் சொல்லாம். அதில் அனைவரும் ஒத்துப்போகும் போது யார் ஒத்துபோகவில்லையோ அவர்கள் கெட்ட குணம் கொண்டவர்கள். இது போல் உங்களுக்கும் குணம் இருந்தால் அதனை நினைத்து கவலை படாமல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
- இரண்டாவது குணம் கொண்டவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது. முக்கியமாக நாம் செய்யும் விஷயத்தில் சரியாக இருப்பதை எப்படி ஒப்புக்கொள்கிறோமோ அதேபோல் நாம் செய்யும் தவறுகளையும் ஒப்புக்கொள்வது பெரிய குணம் கொண்டவர்கள் என்று சொல்லாம். அதனால் உங்களுக்கு ஒப்புக்கொள்ள கூடாத குணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள 7 வித்தியாசங்கள் உங்களுக்கு தெரியுமா.?
- மூன்றாவதாக பார்க்கபோகிற குணம் என்ன என்றால் போலியான முகம். பொதுவாக அனைவருக்கும் இரண்டு விதமான முகம் இருக்கும். அதில் வீட்டில் ஒரு மாதிரியும் வேலை பார்க்கின்ற இடத்தில் ஒரு மாதிரியும் இருப்பார்கள். அது தொழிலில் முன்னேற்றத்திற்கு நல்லதாக இருந்தாலும் உறவுகளுக்கு இடையே அது தவறாக இருக்கும். ஒருவரிடம் நீங்கள் அன்பு செலுத்தினால் அதற்கு அதிகளவு உண்மையாக இருக்க வேண்டும். அன்பு வைத்திருப்பவர்களுக்கு நீங்கள் போலியாக அன்பு செலுத்துகிறீகள் என்றால் அவர்களுக்கு மனம் உடைந்து போயிடுவார்கள். அதனால் அது ஒரு கெட்ட குணமாக இருக்கும்.
- நான்காவதாக பார்க்கபோகிற விஷயம் என்னவென்றால் அது பொறாமைப்படுவது. ஒரு மனிதர் அல்லது உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது நன்றாக வாழ்ந்தார்கள் என்றால் அல்லது வெற்றி பெறுகிறார்கள், என்றால் அவர்களை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் தவிர அவர்களை பார்த்து எதற்காகவும் பொறாமைகொள்ள கூடாது.
- ஐந்தாவதாக பார்க்கபோகிற குணம் போட்டி மனப்பான்மை ஆகும். அதாவது நாம் ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைகிறோம் என்றால் அதனை அவர்கள் செய்யவில்லையென்றால் அதனை அவர்கள் தான் செய்ய வேண்டும் என்றும் சொல்லி செய்ய சொல்வது. அதேபோல் ஒரு வீட்டில் இரு குழந்தைங்கள் இருந்தால் அவர்களுக்கு இடையே போட்டிகள் நிறைய நடக்கும் அப்போது அவன் செய்யவில்லை நான் எதற்கு ஏன் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் இந்த குணம் இருந்தால் அது ஒரு நச்சு குணம் என்று சொல்வார்கள்.
- ஆறாவதாக குறை சொல்வது. இந்த குணம் மனிதனுக்கு இருக்கக்கூடிய கெட்ட குணம் ஆகும். இந்த குணம் என்பது பக்கத்தில் வீட்டில் போய் எதிர்விட்டு உள்ளவர்களை பற்றி பின்பு பேசுவது தவறு. ஒருநபரை பற்றி பின்பு பேசவே கூடாது. அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விசயாமாக இருந்தாலும் சரி அது மிகவும் கெட்ட குணம். இதுபோல் குணம் கொட்டுவார்கள் கெட்ட குணம் படைத்தவர்கள் என்று சொல்லபடுகிறது.